Similar Posts
நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…
இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018
2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…
இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019
இரத்தினபுரி மாவட்டத்தில் கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுதோறுமான திருவிழாவில் அன்னதானப்பணியை வழமைபோன்று இவ்வாண்டும் (23-03-2019) இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தியது. பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன்,பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா , பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இப்பணி ஆண்டுதோறும் சிறப்புற நடைபெற்று வருவதுடன், அங்குள்ள மக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகம் இரண்டறக் கலந்துறவாட இது அருமையான வாய்ப்பாக அமைந்துவருதல் சிறப்பம்சமாகும்.
வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு
வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். comments
சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை
மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார். comments
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…



