தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!
தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்! – இலங்கை சைவநெறிக் கழகத்தின் “சைவம் போற்றுதும்” நிகழ்வில் பரவசம். இலங்கை சைவநெறிக் கழகத்தினரின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற “சைவம் போற்றுதும்” விழாவானது பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கடந்த 2023.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகுசிறப்பாக இடம்பெற்று முடிந்தது. “தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்து சிவத்தமிழ் பருகும் திருவிழா” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விழா, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் கோவிலில், சைவசமய மரபில் சைவசமயப் பதிநூல்கள் சிவபெருமானின் திருமூர்த்தமாகப் பாவிப்பதினால்…
