Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • சீரடிபாபா வழிபாடு -சைவசமயத்தினை ஒழிப்பதற்கு திட்டமிட்டுப் புகுத்தும் சுமார்த்தமத அரசியல்
    2023 | கழகத் தலைவர் உரைகள் | கழகத் தலைவர் சொற்பொழிவுகள் | சமயப்பணி | சைவச்சொற்பொழிவுகள்

    சீரடிபாபா வழிபாடு -சைவசமயத்தினை ஒழிப்பதற்கு திட்டமிட்டுப் புகுத்தும் சுமார்த்தமத அரசியல்

    Byilankaisaivism 2026-05-28

    சைவசமயத்தவரின் சமய உறைப்புநெறியைச் சீர்குலைத்தாலேயொழிய பிறிதொருவழியிலும் தமது ஏகான்மவாத சுமார்த்தமதக் கொள்கைகளைப் புகுத்தமுடியாதென்று நன்குணர்ந்து, சைவசமயத்தவரின் கற்புநெறியைச் சீர்குலைக்குமாறு சீரடிபாபா வழிபாடு புகுத்தப்பட்டுவரும் இப்பெரும் இடர்காலத்தில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் சைவசமயத்தவருக்குச் சீரடிபாபா வழிபாடென்பது கற்புநெறியைச் சீர்குலைக்கும் இறக்குமதி வணிக வழிபாடே என்பதனைக் கட்டுரைகள் வாயிலாகச் சமூக ஊடகங்களில் எழுதிவந்தபோதும், சில ஸ்மார்த்தமத ஏகாதிபத்திய அனுதாபிகளாக விளங்கும் ஆச்சாரிய அபிடேகமெடுத்த பதிதர் சீரடிபாபாவுக்கு திருக்குடமுழுக்கு சிவாக்கினி வளர்த்தல் என்பவற்றை நடத்தினர். இதனால், சைவப்பெருமக்கள்…

    Read More சீரடிபாபா வழிபாடு -சைவசமயத்தினை ஒழிப்பதற்கு திட்டமிட்டுப் புகுத்தும் சுமார்த்தமத அரசியல்Continue

  • திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே!
    2023 | கழகத் தலைவர் சொற்பொழிவுகள் | சமயப்பணி | திருவள்ளுவநாயனார்

    திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே!

    Byilankaisaivism 2026-05-28

    திருவள்ளுவர் பெருமானினை திருநீறு அணிவித்து யாழ்ப்பாணத்தில் சிலை வைத்ததும் நாத்தீக ஈவேராவியல் அரசியலால் செல்வாக்குப்பெற்ற சிலர்,” திருவள்ளுவர்பெருமானுக்குத் திருநீறு அணிவிக்கலாமா?” என்று சமூக ஊடகங்களில் விசனங்களைப் பரப்பத் தொடங்கினர். இதன்போது, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களால், திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே என்பதனை நன்கு விளக்கிக் காணொளி 25 – 03 – 2023ஆம் நாள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது.  

    Read More திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே!Continue

  • மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023
    2023 | சமயப்பணி | சைவசமய மாநாடு | சைவசித்தாந்தக் கருத்தரங்கு

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    Byilankaisaivism 2026-05-28

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

    Read More மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023Continue

  • பன்னாட்டு சிறுவர் திருநாள் கொண்டாட்டம் – மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில்!
    2023 | சைவ அறநெறி

    பன்னாட்டு சிறுவர் திருநாள் கொண்டாட்டம் – மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில்!

    Byilankaisaivism 2026-05-27

    பன்னாட்டு சிறுவர் திருநாளினைக் கொண்டாடும் வகையில் 01 – 10 – 2023ஆம் நாளன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் சைவ மாணவர்களுக்கு பயிற்சி நூல்கள் (கொப்பிகள்) வழங்கப்பட்டதுடன், தென்னாடு பத்திரிக்கையும் நீதி நூல்களும் வழங்கப்பட்டன.

    Read More பன்னாட்டு சிறுவர் திருநாள் கொண்டாட்டம் – மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையில்!Continue

  • ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திருப்பேறு
    2023 | கழக வெளியீடுகள் | சைவ நூல்கள்

    ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திருப்பேறு

    Byilankaisaivism 2026-05-27

    திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளாய் விளங்கி அருளும் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூசை திருநாளான 26-07-2023ஆம் நாள், சுத்தசைவம் நூலாசிரியர் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்டதும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தினாலும் தமிழ்நாடு புனிதர் பேரவையினாலும் இணைந்து பதிப்பிக்கப்பட்டதுமான  ‘ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் ‘ நூலை ஆசீர்வதித்து வெளியிட்டருளினார்.      

    Read More ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திருப்பேறுContinue

  • ❤️❤️❤️சொய்சாப்புரத்தில் சிவத்தமிழ்க் கலைவிழா -2023 ❤️❤️❤️
    2023 | சமயப்பணி | சிவத்தமிழ்க் கலைவிழா | சைவ அறநெறி

    ❤️❤️❤️சொய்சாப்புரத்தில் சிவத்தமிழ்க் கலைவிழா -2023 ❤️❤️❤️

    Byilankaisaivism 2026-05-27

    சிவத்தமிழ்க் கலைவிழா – இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் முத்தமிழ் பொங்கும் சிவத்தமிழ்க் கலைவிழாவானது 05-11-2023ஆம் நாள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி வெகுசிறப்பாகச் சொய்சாப்புரம் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இக்கலைவிழாவின் பொருட்டுப் பேச்சுப்போட்டி, வினாத்தாள் தேர்வுப்போட்டி என்பவற்றுடன் கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் சித்திபெற்ற மாணவருக்குச் சிறப்புப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், அனைத்து மாணவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.                …

    Read More ❤️❤️❤️சொய்சாப்புரத்தில் சிவத்தமிழ்க் கலைவிழா -2023 ❤️❤️❤️Continue

  • சொய்சாப்புரத்தில் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழா
    2023 | சமயப்பணி

    சொய்சாப்புரத்தில் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழா

    Byilankaisaivism 2026-05-27

    சொய்சாப்புரத்தில் இயங்கிவந்த சைவசமயத்தாருக்குரிய அறநெறிப் பாடசாலை செயலிழந்துபோனமையினால், புதிதாகவொரு அறநெறிப் பாடசாலை தோற்றுவித்து உதவும்படி இலங்கைச் சைவநெறிக் கழகத்தாருக்கு பெற்றோர் பலரும் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக,  இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை என்னும் பெயரில்,  20 – 08 – 2023ஆம் நன்னாளில்,  இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் சைவசமய அறநெறிப் பாடசாலையைத் தோற்றுவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியானது,  ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சொய்சாப்புரம் டி சொய்சா நவோதயா பாடசாலை மண்டபத்தில், சைவத்திருமதி பரமேஸ்வரி கதிர்காமநாதன்…

    Read More சொய்சாப்புரத்தில் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழாContinue

  • தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!
    2023 | இ/சைவநெறிக் கழகம் | கழக வெளியீடுகள் | சமயப்பணி | சைவசமய மாநாடு | சைவம் போற்றுதும்

    தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!

    Byilankaisaivism 2026-05-27

    தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்! – இலங்கை சைவநெறிக் கழகத்தின் “சைவம் போற்றுதும்” நிகழ்வில் பரவசம். இலங்கை சைவநெறிக் கழகத்தினரின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற “சைவம் போற்றுதும்” விழாவானது பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கடந்த 2023.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகுசிறப்பாக இடம்பெற்று முடிந்தது. “தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்து சிவத்தமிழ் பருகும் திருவிழா” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விழா, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் கோவிலில், சைவசமய மரபில் சைவசமயப் பதிநூல்கள் சிவபெருமானின் திருமூர்த்தமாகப் பாவிப்பதினால்…

    Read More தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!Continue

  • சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்
    2023 | கழக வெளியீடுகள் | சமயப்பணி | சைவ நூல்கள் | சைவசமய மாநாடு

    சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்

    Byilankaisaivism 2026-05-272026-05-27

    சைவப்பெருஞ்சமயத்தில் சுமார்த்தமதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்தங்களினை இனங்கண்டு நீக்கி, சைவப்பெருஞ்சமயத்தினை சுத்தநெறியாகத் தாபிக்கும் திருநூல் என்பதுவே, சுத்தசைவம் நூலின் சிறப்பாகும். தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலினை முழுமையாகப் படித்து இன்புற்ற சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் அடியேனிடம் ”நூலாசிரியரினை யானைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருதலே எம் கடனாகும்” என்று உள்ளம் கசிந்துருகக் கூறினார். தம் நூல்கள் முதலிய பல சைவ நூல்களுக்கும் பொருள் விளக்கம் கொள்வதற்கு இந்நூலே உறுதுணை என்பதினை இந்நூலினைப்…

    Read More சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்Continue

  • நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்
    2023 | சமயப்பணி | தீக்கை வழங்குதல்

    நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

    Byilankaisaivism 2026-05-20

    மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம்…

    Read More நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்Continue

Page navigation

1 2 3 … 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search