Similar Posts
இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014
இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர். மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது. இவ்வாலயத்தின்…
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை. comments
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…
கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்
தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, தென்னிலங்கை மலையத்தமிழ் மாணவரின் கல்வி வளர்ச்சிக்குரிய பணிகளில் பங்கேற்றுக்கொண்டது. comments
இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணி
இரத்தினபுரி கலத்துர தோட்ட முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் வழமைபோன்று இவ்வாண்டும் இலங்கை சைவநெறிக் கழகம் அன்னதானப் பணியினை ஏற்று நடத்தினர். comments
2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்
பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள் நாவலர் விழாவினை நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.














