| |

புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் "சிவலிங்கம்" பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால்,  இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையைப் பெற்று, அவர்களின் வேண்டுதலை பூர்த்திசெய்யும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டது. பஞ்சலோக சிவலிங்கத்தினை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் பெற்று, பெரியசந்திக் கிராமமக்களின் வழிபாட்டிற்காக, அங்குள்ள ஐயனார் கோயிலிற்கு  வழங்கப்பட்டது.

இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வேண்டிக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக, அகில இலங்கை இந்து மாமன்றத்தால் பஞ்சலோக சிவலிங்கம் கொள்வனவு செய்யப்பட்டு, 
28-06- 2019ஆம் நாள் இலங்கை சைவநெறிக் கழகத்தாரிடம் கையளிக்கப்பட்டது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் திரு.முத்துக்குமாரசுவாமி அவர்களை அழைத்துக்கொண்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி ஆகியோர் நேரடியாக புத்தளம் பள்ளிவாசல்துறை,பெரியசந்திக் கிராமம் ஐயனார் ஆலயத்திற்கு 05-07-2019ஆம் நாள்  பயணஞ் செய்து, பஞ்சலோக சிவலிங்கத்தினை அவ்வாலய நிர்வாகசபையினரிடம் கையளித்தனர்.

சைவவழிபாடுகள் அவ்விடத்திற் மேலும் வலுப்பெற இப்பணி ஏதுவாக அமையுமென்ற நிதர்சனத்திற்கு அமைவாக, கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி செ.உதயகௌரி அவர்களால் செவ்வனே திட்டமிடப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Similar Posts

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

  • |

    யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்

    தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது. comments

  • | |

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018)  இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார். comments

  • |

    ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

    ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…

  • |

    புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017

    புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும்  கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார்.     comments

  • தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை

    சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும். comments