சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்

சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று பாராட்டுக்குரியது. எறும்பு, யானை, சிலந்தி,    ஈ,    காகம்,    குரங்கு என்று சிவபெருமானை இவ்வகையிற் வழிபட்டு உய்வடைந்த சைவப்புராணச்செய்திகள் ஏராளம். இவ்வாறு, விலங்குகளே பூசைசெய்து சிவபெருமானின் அருளைப் பெற்றுய்ந்துள்ளபோது, பிறத்தற்கரிய மானிடப்பிறவியிற் அடைதற்கரிய அரும்பேறாகிய சைவசமயத்தினைச் சார்ந்த சைவமக்கள், சிவபூசையினைக் கைக்கொள்ளாவிட்டால், எடுத்த பிறப்பை வீணாக்கியதாகவே முடியும்.

சிவாகமவழிப்பூசை செய்யக்கூடிய பக்குவம் அற்றோர், அன்புமார்க்கப்பூசையேனும் (பொது ஆன்மார்த்த சிவபூசை) இல்லத்தில் செய்துவருதல் வேண்டும். சிவாகமவழிப்பூசையினைச் செய்வதற்கு சமயதீக்கையும் விசேடதீக்கையும் பெற்றிருத்தல் வேண்டும். இந்த இரண்டு தீக்கைகளும் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதேயாகும். சமயதீக்கை பெற்று விதிப்படி அனுட்டானம் முதலியன உடையோர்கள் விசேடதீக்கைக்கு தகுதியுடையவர்களாவர். இவ்வாறு விசேடதீக்கை பெற்றுக்கொண்டோர் செய்யும் நித்திய சிவபூசை சிவாகமவழியில் அமைந்ததாகும். இவ்வாறு, சிவாகமவழியில் அமைந்த பூசையினைச் செய்வதற்கு விதிப்படி ஒழுகும் சூழல் வாய்த்திடாதோர், அன்புமார்க்க சிவபூசையினையேனும் நித்தமும் செய்துவருதல் வேண்டும். இருவகைப்பூசைகளுக்கும் நாம் சிவபெருமான்பால் கொள்ளும் அன்பே முதன்மையெனினும், சமயநெறி வழக்கில் சிவாகமவழியில் விதிப்படி பூசிக்கும் சூழலைப் பெற்றுக்கொள்ளாதோர் செய்யும் அன்புமார்க்கச் சிவபூசை, பொது ஆன்மார்த்த சிவபூசையென்றும், அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசையென்றும் பாராட்டப்படும்.

சிவபூசை இல்லாத மனிதப்பிறப்பு வீணானதும் பாழானதுமாகும். சிவபூசையினை மிகவும் சுருக்கமாகச் செய்வது முதல் மிக விரிவாகப் பூரணமாகச் செய்வதுவரை பல படிநிலைகளைக் கொண்டு பலவகையினதாக உண்டு. ஒரு பிள்ளை நாள்தோறும் 2 மணித்தியாலம் கற்கின்றது. இன்னொரு பிள்ளை நாள்தோறும் 6 மணித்தியாலம் கற்கின்றது. அதிக மணித்தியாலம் கற்கும் பிள்ளை அதிக பலனைக் கல்வியில் அடைவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதேசமயம், குறைந்த மணித்தியாலங்களே கற்கும் பிள்ளை சிலசமயம் தனது நினைவாற்றலால் ஏனைய பிள்ளைகளைவிட அதிக பலனையும் அடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. நினைவாற்றல் கைகொடுக்கவில்லையென்றாலும், 2 மணித்தியாலக்கல்வி சிறிது பயனையேனும் கொடுத்தே தீரும். கல்விக்கு நேரத்தையே ஒதுக்காது வீணே கழிக்கும் ஒரு பிள்ளையினைவிட சிறிதளவேனும் நேரம் ஒதுக்கிக் கற்கும் பிள்ளை போற்றப்படவேண்டிய பிள்ளையாகும். அதுபோல், சிவாகமவழியில் பூசைகளைச் செய்யும் சூழலை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாவிட்டால், குறைந்தபட்சம் அன்புமார்க்கச் சிவபூசையேனும் நித்தியம் செய்துவருதல் வேண்டும். சிவபூசையினை நினைத்தலே பெரும்புண்ணியம் என்னும்போது, சிவபூசையினை இமைப்பொழுது நேரமேனும் செய்வது கோடிப் புண்ணியத்தை ஈட்டித்தரும்.

இல்லங்களில் செய்யக்கூடிய அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசை நூலை இலங்கை சைவநெறிக் கழகம் பதிப்பித்துள்ளது. இந்நூலைச் சைவப்பெருமக்கள் உவந்தேற்றுப் பயன்படுத்தி சைவராய்ப் பிறந்த பயனை எய்துதல் கடனாகும்.  எந்தவொரு கிரகதோசங்களானாலும் எந்தவொரு தடைகளானாலும் அவை எமது வினைகளால் வருவனவேயாகும். எனவே, அவற்றை அக்கிரகங்களோ அன்றி ஏவல்வழி நிற்கும் ஏனைத் தெய்வங்களோ மாற்றுவதென்பது முடியா! எனவே, வினைகளை உயிர்களின் பக்குவத்தின்பொருட்டு ஊட்டும் கடவுளினை வழிபடுவதனூடாகவே, பக்குவம் எய்தி வினைகளிலிருந்து விடுபடமுடியும். உயிர்களோடு  கடந்தும் உள்ளும் விளங்கும் சிவபெருமானின் அருட்கருணையே நாம் வினையை வெல்வதற்கு ஓராவழியாகும். எந்தவொரு புராணத்திலும் எந்தவொரு இதிகாசத்திலும் கிரகங்கள் முதலியவற்றை வழிபட்டு வினைகளிலிருந்து விடுபட்டதாக வரலாறில்லை. சிவபெருமானின் ஏவலில் விளங்கும் தெய்வங்கள் யாவும் தம் வினைகளையே மாற்றமுடியாது சிவபெருமானின் ஏவல்வழி நிற்பவையேயாகும். எனவே, சிவபெருமானை வழிபடுவதே நம் வினைகளை வெல்வதற்கு நமக்கு விளங்கும் ஒரேயொரு வழியாகும்.

பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் 
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்ற வரும் உறுதுணையும் நீயே என்றும் 
உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்
புற்றரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும் 
பொழில் ஆரூரா என்றே போற்றா நில்லே. -அப்பர் பெருமான்
திருஞானசம்பந்தப்பெருமான் முதலிய நாயன்மார்களும் ஏனைய அருளாளர்களும் நமக்கு வழங்கியுள்ள உத்தரவாதமான பாதையும் சிவவழிபாடேயாகும். உமாதேவியார் முருகன் பிள்ளையார் முதலிய சிவவடிவங்களையும் சிவபெருமானையும் வழிபடுவதே நமக்கு விதிக்கப்பட்ட கற்புமார்க்கமுமாகும்.  எனவே, சைவப்பெருமக்களே,  இல்லத்தில் உங்கள் சத்திக்கு ஏற்பச் சிவபூசை செய்யப்பழகிக் கொள்ளுங்கள். திருமணத்தடை, பிள்ளைப்பேறுத் தடை, கடன் தொல்லைகள் என்று ஏராளமான வழிகளில் வினைகள் நம்மை வாட்டும். ஆனால், சிவபெருமானின் திருவடிகளை மறந்து பிறவழிகளிற் செய்யும் முயற்சிகள் யாவும் வினைப்பெருக்கமாகவே முடிவுறும். சிவபெருமானின் திருவடிகளே நம்மை வினைகளில் இருந்து விடுவிக்கும்.  குழந்தை எவ்வளவுதான் அழுது புரண்டாலும் குழந்தை கேட்கின்றதேயென்று எந்தவொரு தாய் தந்தையரும் கத்தியைக் குழந்தையிடம் கொடார்! அதுபோல், நாம் கேட்கும் வரத்தால் நமக்குத் துன்பமே மிகும் என்றால் சிவபெருமான் தம்பால் பத்தியுடையவர்களுக்கு அவற்றைக் கிட்டச்செய்யாது காப்பார்.  குழந்தை தாய் தந்தையர் தாம் ஆசைப்பட்டுக் கேட்ட கத்தியைத் தரவில்லையென்று நொந்துகொள்வது வழக்கு. அக்குழந்தைபோல் நாமும் சிவனருளை உணராது சிவபெருமானை நிந்திக்கலாம்! ஆனால், அதனால் நமக்கே நட்டம்! இவ்வுண்மையை உணர்ந்து, சிவபத்தியில் கொள்ளும் வைராக்கியம் எம்மை உயர்த்தும்!!!
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு!  – காரைக்கால் அம்மையார்
“என்னுடைய இடர்களை ஒழிக்காவிட்டாலும் எனக்குரிய நல்வழியைக் காட்டித்தராவிட்டாலும் சிவபெருமானே, உன்பால் அடியேன் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது. உனக்கு மட்டுமே என் நெஞ்சு ஆட்பட்டு நிற்கும்” என்று காரைக்கால் அம்மையார் அருளிச்செய்தவாறு நாம் நிற்பதே கடனாகும்! இந்தக் கற்புநெறியில் நிற்போர் வினைகளை வெல்வர் என்பது உறுதி!
எல்லாம் திருவருட் சம்மதம்

1) இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட சைவப்பெருமக்கள் அனைவரும் இல்லங்களில் செய்யக்கூடிய அன்புமார்க்க சிவபூசை நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
                                                

2 ) சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவார் -சிவபூசை நூல்

DOWNLOAD 1A
DOWNLOAD 1B

3)சிவபூசைத் திரட்டு – நாவலர்பெருமான் தமது சிவபூசைக்கென்று பயன்படுத்திய திருமுறைகளைச் சிவபூசைப் படிமுறையில்  எழுதிவைத்திருந்த ஏட்டுச்சுவடியைக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட நூல்.

DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B
DOWNLOAD 3A
DOWNLOAD 3B
4)பார்த்திப பூசாவிதி – திருவாவடுதுறை ஆதீனம் சிவபூசை நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

                                            

5)தஞ்சாவூர் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் காணப்பட்ட ஏட்டுச்சுவடியின்படியான சிவபூசைப் பத்ததி நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 1C
DOWNLOAD 1D
DOWNLOAD 1E

6) அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் – சிவபூசை நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
7)அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் – சிவபூசை விளக்கம் நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A 
DOWNLOAD 2B
8) தருமை ஆதீன சிவபூசை விதி நூல் – 2016ஆம் ஆண்டு  ஐந்தாம் பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. 1953ஆம் ஆண்டுப் பதிப்பு இணையத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது.
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B

9)கூனம்பட்டி கல்யாணபுரி சிவாசாரிய ஆதீன வெளியீடு -சைவானுஷ்டான முறை (சைவ நிந்திய அனுட்டான விதியும் சிவபூசையும் அடங்கிய நூல்) – எளிமையான ஆன்மார்த்த சிவபூசை விதி நூல்.
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

10) சிவபூசை செயன்முறை விளக்கம் –  திரு.நா.சி.சிதம்பரம், சிவ.சித்திரசபாபதி ஆகியோர் தொகுத்து, சகுந்தலை நிலைய வெளியீடாக வந்துள்ள நூல்.  முதல் பதிப்பு –  2021 நவம்பர். 

DOWNLOAD 
11) சிவ பூஜா சங்கிரஹம் –தொகுத்தவர் – உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப செட்டியார், தேவகோட்டை
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
                                    
12) பத்தே நிமிடத்தில் பரமன் பூசை – வெளியீடு: வேதாகம அகாதமி,இலண்டன் (மிகச் சுருக்கமான சிவபூசை நூல்)
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

13) முத்தி தரும் செந்தமிழாகம சிவபூசை – வெளியீடு : சைவ மாணவர் சபை – இலங்கை –  சிவத்திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூலைத் தழுவியது.
14)சைவசித்தாந்த சரபம் வயிநாகரம் – பாலகவி சிவத்திரு தற்புருஷ தேசிகர் -தேவகோட்டை – சிவபூசை விதியும் விளக்கங்களும்
(இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னூல் இணையப்பரப்பில் இதுவரை கிடைக்கவில்லை.)
15)சிவபூசை விதி –  தாயுமானவர் சைவ சித்தாந்தப் பேரவை – திருச்சிராப்பள்ளி – சிவத்திரு தற்புருஷ தேசிகர் ( சிவநெறிச் செம்மல்,திருத்தொண்டர் சிவத்திரு. சொ.கிருஷ்ணன்)-(இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னூல் இணையப்பரப்பில் இதுவரை கிடைக்கவில்லை.)


16) சிவபூசை முறைகளிற் சிந்தாந்த விளக்கம் (ஆன்மார்த்தம்) –  சிவத்திரு.செ.ஈசான சொர்ணலிங்கம் தேசிகர் –  சிவத்திருமன்றம் வெளியீடு
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

17) பிரயோக சந்திரிகாக்யோயம் கிரந்த: (சிவபூசையில் சிவாகமக் குறிப்புக்களை விளக்கும் நூல் – வடமொழி (கிரந்தம்) – தமிழ்மொழி என்னும் இருமொழியும் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

18) ஞான சிவாசாரியர் எழுதியருளிய சிவபூஜா ஸ்தவம்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A 
DOWNLOAD 2B
DOWNLOAD 3A
DOWNLOAD 3B

19) சிவபூஜாக்ரமம் – வெளியீட்டாளர்-  ஶ்ரீ அரசகேசரி விநாயகர் தேவஸ்தானம் – நீர்வேலி (யாழ்ப்பாணம்)
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

20) ஆத்மார்த்த சிவபூஜா பத்ததி – தொகுப்பு சிவத்திரு.ச.மகாலிங்கசிவக்குருக்கள் (யாழ்ப்பாணம்)
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

21)சிவபூசை விதி சுவடி -சேகரிப்பாளர் பத்மநாபன் சர்வேஸ்வரா ஐயர் சேகரம்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

22) சிவபூஜா க்ரம பத்ததி – சிவத்திரு சத்திக்கிரீவன் – பதிப்பு -இந்து சமயப் பேரவை -யாழ்ப்பாணம்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

23) திருவாவடுதுறை ஆதீன ஞானபூசை விதி  –  சிவபூசையை ஞானமார்க்கத்தில் நின்று செய்யும் விதிமுறை விளக்கப்பட்டுள்ள நூல்.
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

24)சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவார் -சிவபூசை நூலைத் தழுவிய சிவபூசைச் செயன்முறைக் காணொளி
25)சிவத்திரு பவானி தியாகராசனார் அவர்களுடைய சிவபூசைச் செயன்முறைக் காணொளி

26)கூனம்பட்டி ஆதீன சிவபூசைச் செயன்முறைக் காணொளி


27)தருமையாதீன மரபில் அமைந்த சிவபூசைச் செயன்முறைக் காணொளி

28)தருமையாதீன மரபில் அமைந்த சிவபூசை விளக்கப் பாடம்


29)சிவ ஜானகிராமனார் சிவபூசைச் செயன்முறைக் காணொளி

30)சிவ.இரா.ரமேஷ்குமாரனார் சிவபூசை விளக்கவுரை

குறிப்பு :-1இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள நூல்கள் இணையப்பரப்பில் சேகரிக்கப்பட்டதாகும். பயன்படுத்தும் வகையில் பதிப்புரிமை இடர்களைத் தவிர்த்துள்ள அமைப்புக்களின் நூல்கள் இணையத்தில் ஏற்றப்பட்டும் இப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பதிவு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வலைப்பூவிலும் பேணப்பட்டுள்ளது. வலைப்பூ முகவரியில் இடுக்கியை அழுத்திச் சென்று காணலாம். –சிவபூசை – நூல்களும் காணொளிகளும்.

குறிப்பு-2 :- சைவப்பெருஞ்சமயமே இலங்கை சைவநெறிக் கழகத்தால் நோக்கப்படுவதால், பல்வேறு மரபுகளிலும் விளங்கும் சிவபரத்துவப்பூசை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

comments

preload imagepreload image