Similar Posts
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 – 2021ஆம் நாளன்று மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments
புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017
புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார். comments
2018 | சமயப்பணி | சமூகப்பணி | சைவ அறநெறிபுத்தளம் பள்ளிவாசற்துறை சைவக்கிராமத்திற் கழகப்பணி 2018
இலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு சமயக்கருத்தரங்குகளை 04-03 – 2018ம் ஆண்டு நடத்தியதுடன், அம்மாணவர்க்கு புத்தகப்பைகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.
பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்
அட்டன் பிரதேச பேயாலோன் தோட்டம் (Hatton Fairlawn Estate) முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருத்தற் பணிகளுக்கு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் 20,000/= ரூபாய்கள் தமது சொந்தப்பணத்தினை கழகத்தின் சார்பில் நன்கொடையாக அளித்தார்கள். (கழகக்கூட்டம் ஒன்றில் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடன் கழகத்தின் பொதுச்செயலாளர்,தலைவர் உள்ளனர்.) comments
இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்
இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் 20 – 0 2 – 2021ம் நாள் அன்னதான உபயத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து செவ்வனே நடத்தியிருந்தது. comments
இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018
2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…

