சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014

01) கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுர விநியோகம்

கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் 27 – 02 – 2014ஆம் நாள் சிவராத்திரிப் பெருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் விநியோகிக்கப்பட்டது.

02) கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல்

சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில்  திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார்.

comments