Similar Posts
2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments
யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021
இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments
அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக் கிருஷ்ணக்குருக்கள்,சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும், பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில…
சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013
05 – 08 – 2013ஆம் நாளன்று மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…
நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்
1969ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப்பட்ட நாவலர் மாநாட்டு மலரினை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் மறுபதிப்பாக அச்சேற்றப்பட்டு, 03-08-2013 ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மண்டப நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோடு, நூல்களை மண்டபத்தில் விற்கும் பொறுப்பினையும் ஏற்று, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) மரு.கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் அவற்றையெல்லாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தது.
சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை
மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார். comments
