மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு


இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில் பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர். …
இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில், மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும், விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது. அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு. ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…
2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…
தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும். 05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். comments
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுர விநியோகம் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் 27 – 02 – 2014ஆம் நாள் சிவராத்திரிப் பெருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் விநியோகிக்கப்பட்டது. comments
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…