Similar Posts
பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு கொப்பி புத்தகங்கள் உதவி
அட்டன் நகருக்கு அண்மையில் பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் பயிற்சிப்புத்தகங்கள்(கொப்பிகள்), எழுதுகோல்கள் (பென்சில்,பேனைகள்) ஒருதொகையை இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் சனவரி 2019களில் தமது சொந்தப்பணத்தில் வாங்கி வழங்கியிருந்தார்கள். . comments
யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்
தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது. comments
கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும்
கொழும்பு இந்துக் கல்லூரி கற்பக விநாயகர் திருக்கோயிலில் 18 – 11 – 2021ம் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள் திருவிழா, இலங்கை சைவநெறிக் கழகத்தின் நிதி அனுசரணையுடன் சிறப்புற நடைபெற்றது. அத்தோடு வில்வமரம், விளா வேம்பு முதலிய மரங்களும் பாடசாலைச் சூழலில் வளர்க்கும் முகமாக, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் முதலாவது மரநடுகைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. comments
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…
இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்
இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் 20 – 0 2 – 2021ம் நாள் அன்னதான உபயத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து செவ்வனே நடத்தியிருந்தது. comments
ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்
ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே, பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…



