சிவஞானபோதம் மின்னூல்கள்

சைவசித்தாந்தத்தின் மிக இளைய கிளை, மெய்கண்ட சித்தாந்தம் எனும் தமிழ்ச் சைவ சித்தாந்தம். இதன் முதன்மையான நூல் சிவஞானபோதம். வேதாந்திகளுக்கும் சிவாத்துவைதிகளுக்கும் பிரம்ம சூத்திரம் போல, காசுமீர சைவர்களுக்கு சிவசூத்திரம் போல, மெய்கண்ட சித்தாந்திகளுக்கு முதன்மையான நூல் இது. இது தமிழில் சூத்திர (நூற்பா) வடிவிலே எழுதப்பட்டுள்ளது. மெய்கண்ட தேவநாயனார் பதினான்காம் நூற்றாண்டில் இதை அருளிச்செய்தார்.

 

இந்நூல் மங்கல வாழ்த்து, அவையடக்கம் ஆகிய இரு செய்யுள்களுடன் ஆரம்பிக்கின்றது. பொது, உண்மை எனும் இரு அதிகாரங்களாகவும், பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன் எனும் நான்கு இயல்களாகவும், இந்நூலின் பன்னிரு சூத்திரங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இறை, உயிர், தளை எனும் முப்பொருள் பற்றிய சுருக்கமான விளக்கங்களை ஆகமங்களிலிருந்து திரட்டிக் கூறுகின்றன.

 

உள்ளடக்கம்

ஒவ்வொரு சூத்திரங்களையும் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்காக கருத்துரை, மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்பனவற்றையும் மெய்கண்ட தேவர் அருளியுள்ளார். இதிலுள்ள கருத்துரை வார்த்திகம் என்று அழைக்கப்படுவதுடன், பொதுவாக நூலோடு சேர்த்தே கற்கப்படுகிறது. இன்னும் இந்நூலின் பொருளை எளிமையாகப் புரிந்துகொள்ள “சிவஞானபோத சூர்ணிக்கொத்து” எனப்படும் பொருள்விளக்க நூல் பயன்படுகின்றது. இதுவும் சிவஞானபோதம்12 நூற்பாக்களுடன் சேர்த்தே பெரிதும் கற்கப்படும்.

மரபான உரையாசிரியர்கள்

1. வார்த்திகம் – மெய்கண்டதேவரே செய்தது.  இது நூலோடு சேர்த்து கற்கப்படும்.

2. சிவஞானசித்தியார் – சிவஞானபோதத்தின் வழிநூல். மெய்கண்ட தேவரின் தலைமைச்சீடர் அருணந்தி சிவனார் எழுதியது. இன்று தனிநூலாக பெரிதும் கற்கப்படுகிறது.

3. பழையவுரை – சிவஞானபோதத்துக்கான பழைய உரை அல்லது சம்பிரதாய உரை, திருவாவடுதுறை ஆதீனத்தில் பயிலப்பட்டு வருகிறது. காலம், செய்தவர் அறியக்கூடவில்லை.

4. சிந்தனையுரை – திருவாவடுதுறை ஆதீன மூன்றாவது குரவர் அம்பலவாண தேசிகர் எழுதியது.

5. பாண்டிப்பெருமாள் விருத்தியுரையும் பதவுரையும் –  17ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பாண்டிப்பெருமாள் என்பவர் அடுத்து இதற்கு விருத்தியுரையும் (விரிவான உரை) பதவுரையும் (சொற்பொருள் விளக்கம்) எழுதியுள்ளார். 

6. தெளிபொருள் விளக்கவுரை – செய்தவர் யாரென அறியமுடியவில்லை.

7. சிவஞானமுனிவர் பேருரையும் சிற்றுரையும் – 1753 – 1785 இடையே வாழ்ந்த நெல்லை மாதவச் சிவஞான முனிவரால் இயற்றப்பட்டவை. இவரது பேருரை தனித்தமிழில் எழுதப்பட்டு “திராவிடமாபாடியம்” (தமிழ்ப்பேருரை) என்று புகழப்படுகின்றது. சுருக்கமான சிற்றுரை ஒன்றும் எழுதியுள்ளார்.

இந்நூல்கள் அவற்றின் பழைமையாலும் மொழிநடையாலும் சமகாலத்தில் படிக்கக் கடினமானவை. எனினும் இவ்வுரை நூல்களைக் கசடறக் கற்றறிந்த சமகாலத்து அறிஞர்கள் பலர் இக்காலத்தமிழில் எளிமையான உரைகளைச் செய்திருக்கிறார்கள்.


ஆர்வமுள்ளோரின் கற்றலுக்கு வசதியாக, இணையத்தில் மின்னூல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் கிடைக்கும் சிவஞானபோதத்தின் மூலநூல்கள், உரைகள், ஆய்வுக்கட்டுரைகள், மொழியாக்கங்கள், மாற்றுக்கருத்துக்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி கற்கவிரும்பும் மாணவர்கள் தொடக்கநிலையினருக்கான பட்டியலிலுள்ள நூல்களிலிருந்து துவங்கலாம்.

 

குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சிவஞானபோதம் எளிய அறிமுகம்

1. சிவஞானபோதம் வழித்துணை விளக்கவுரை
சித்தாந்தசரபம் ஆ.ஆனந்தராசனார் (1994),
நெல்லை அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றம்.
மின்னூல்: வாசிக்க  தினமலர் வலைத்தளத்தில்: வாசிக்க

 

2. சிவஞானபோதத் திருநெறியுரை
மகாவித்துவான் அருணைவடிவேல் முதலியார் (1992)

கோவை பேரூர் ஆதீனத்து சத்வித்யா சன்மார்க்க சங்கம்
மின்னூல்: வாசிக்க   இரண்டாம் பதிப்பு (தொகுதி 2): வாசிக்க

 

சிவஞானபோத மாபாடியம் எளிய அறிமுகம்

3. சிவஞானபோத மாபாடியப் பொருள்நிலை விளக்கம்.
மகாவித்துவான் அருணைவடிவேல் முதலியார் (1991)
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாசிக்க

 

4. சிவஞானபோத மாபாடிய காசுப்பிள்ளை உரை
கா.சுப்பிரமணியப் பிள்ளை  (1938)
காஞ்சி தொண்டை நன்னாட்டு சைவசித்தாந்தக் கழகம்
வாசிக்க (இது எல்லா மெய்கண்ட சாத்திரங்களுக்குமான முழு உரைநூல்.)

5. சிவஞானபாடியத் திறவு
க.வச்சிரவேல் முதலியார்
சென்னைப் பல்கலைக் கழகம் (1977)   இணைப்பு

 

6. சிவஞானபோத மாபாடியத் திரட்டு
துறைசை ஆதீன  பொன்.சுப்பிரமணியபிள்ளை உரை (1977)
திருவாவடுதுறை ஆதீனம்    வாசிக்க 

 

 

  • சிவஞானமுனிவர் சிற்றுரை
    ஆறுமுகநாவலர் பரிசோதித்த நல்லூர் சதாசிவப்பிள்ளை பதிப்பு (1885)
    சென்னப்பட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலை.
    வாசிக்க:இணைப்பு 1      இணைப்பு2    இணைப்பு3      இணைப்பு4
  • பாண்டிப்பெருமாள் விருத்தியுரை (வடமொழி நூல் பதவுரையுடன்)
    சண்முகசுந்தர முதலியார் பதி. விசுவேசுவர சாத்திரி பதவுரை, (1887)
    சென்னை சிவஞானபோத யந்திரசாலை  இணைப்பு
  • சிவஞான மாபாடியம்  முதல் சங்கியை
    யாழ். பொன்னம்பலதேசிகர் பதிப்பித்த மாபாடியத்தின் சிறுபகுதி (1898)
    யாழ்ப்பாணம் விவேகானந்த அச்சியந்திரசாலை
    வாசிக்க:இணைப்பு
  • சிவஞான மாபாடியம் இரண்டாம் பதிப்பு
    யாழ். வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதர் பதிப்பு (1906)
    சென்னை சைவவித்தியாநுபாலன யந்திரசாலை
    வாசிக்க:இணைப்பு
  • சிவஞான மாபாடியம் மூன்றாம் பதிப்பு
    மதுரை ஆதீன வித்துவான் சுப்பிரமணியபிள்ளை அவர்கள் பதிப்பு (1906)
    மதுரை விவேகபானு அச்சியந்திரசாலை
    வாசிக்க: இணைப்பு1         இணைப்பு2              இணைப்பு3         இணைப்பு4
  • வடமொழி சிஞாபோ. பகுதி மொழிபெயர்ப்பும் சிவஞான மாபாடியப் பகுதியும்
    சுவாமிநாத பண்டிதர் பதிப்பு (1916)
    சென்னபட்டணம் சைவவித்தியாநுபாலன யந்திரசாலை இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை விளக்கம்
    தூத்துக்குடி பொ.முத்தையாபிள்ளை அவர்கள் (1918)
    சென்னை சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சிறீநிகேதன அச்சுக்கூடம் இணைப்பு

    சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடு (1989): இணைப்பு1      இணைப்பு2     இணைப்பு3
  • சிவஞான மாபாடியம்  நான்காம் பதிப்பு (இன்றைய மாபாடிய மூலநூல்)
    சூரியனார்கோயில் ஆதீன பெரியகுளம் பால்வண்ணம்பிள்ளை பதிப்பு (1921)
    சென்னபட்டணம் சைவவித்தியாநுபாலன யந்திரசாலை.
    இணைப்பு1                                     இணைப்பு2                         இணைப்பு3                இணைப்பு4                               இணைப்பு5
  • சிவஞானமாபாடியம்
    மேற்படி நூலின் கழகப் பதிப்பு (1936)
    திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 
     இணைப்பு
  • சிவஞானமாபாடியம்
    மேற்படி நூலின் சமாசப் பதிப்பு (1936)
    சென்னை சைவசித்தாந்த மகாசமாசம்       இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை  வெளிப்படை உரை
    சுப்பிரமணிய தேசிகரின் வெளிப்படைப் பகுதிகளுக்கான உரை (1940)
    சென்னை சைவசித்தாந்த சமாசம்    இணைப்பு
  • சிவஞானபோதம் பழையவுரை
    வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பதிப்பு (1952)
    திருவாவடுதுறை ஆதீனம்   இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை
    ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் (1953)
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை தனித்தமிழ் விளக்கம்
    புலவர்.ப.இராமநாதபிள்ளை தனித்தமிழில் எழுதிய விளக்கவுரை (1953)
    திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்        இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை விளக்கம்
    துறைசை ஆதீன வித்துவான் த.ச.மீ.பிள்ளை அவர்கள் (1954)
    திருவாவடுதுறை ஆதீனம்   இணைப்பு
  • சிவஞானபோதம்
    மூலம் மட்டும்   (1967)
    யாழ்ப்பாணம் சிறீகாந்தா அச்சகம் இணைப்பு
  • சிவஞானமுனிவர் சிற்றுரை நுண்பொருள் விளக்கம்
    தருமை ஆதீனப் புலவர் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் (1991)
    திருப்பனந்தாள் காசி மடம்    இணைப்பு 
  • சிவஞானபோதமும் வார்த்திகப்பொழிப்பும்
    க.வச்சிரவேல் முதலியார், ச.கங்காதரன் பதிப்பு (1978)
    சைவ சித்தாந்தத் தத்துவத்துறை, மதுரைப் பல்கலைக் கழகம்     இணைப்பு
  • சிவஞான போத உபன்னியாச பாடம்
    வி.பி. காந்திமதிநாத பிள்ளை (1918)
    Palamcottah Printing Press.   இணைப்பு1              இணைப்பு2

  • சிவஞானபோதச் சுருக்கம்  with English rendition of Churnikottu
    பஞ்சாட்சரபுரம்  வாலையானந்த சுவாமிகள், Purnalingampillai Trans. (1928)
    சென்னை திருவல்லிக்கேணி  சோல்டன் கம்பெனியார்.     இணைப்பு

  • சிவஞானபோதம் வினா விடை 
    கோவிற்பட்டி, சாமி விருதை சிவஞானயோகிகள் (1930)
    தூத்துக்குடி சைவபிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.        இணைப்பு

  • மெய்கண்டாரும் சிவஞானபோதமும்
    கா.சுப்பிரமணியபிள்ளை  (1932)
    நெல்லை தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    1966 பதிப்பு        இணைப்பு1       1977 பதிப்பு        இணைப்பு2

  • சிவஞானபோதமும் பன்னிருதிருமுறையும்
    துறைசை ஆதீன வித்துவான் தே.ஆ. சிறீநிவாசாரியார் (1954)
    திருவாவடுதுறை ஆதீனம்          இணைப்பு1         இணைப்பு2

  • சிவஞானபோத சாரம்
    காசிவாசி.சிவானந்த யதீந்திர சுவாமிகள்  (1937)
    கீ.நாராயணசாமி முதலியார், வேலூர் சைவ சித்தாந்த சமாசம் இணைப்பு

  • சிவஞானபோதக் கட்டுரை.
    திரு.முத்தையாபிள்ளையும் ஏனையோரும் வரைந்த உரைகள் (1944)
    தருமை ஆதீனம் இணைப்பு
  •  சிவஞானபோதம்  பொழிப்புரை
    கா.சுப்பிரமணிய பிள்ளை (1949)
    திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்    இணைப்பு
  • சிவஞானபோதம் வாரியார் உரை.
    திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் (1956)
    நெல்லை அப்பர் அருட்பணிக் கழகம்       இணைப்பு
  • சிவஞானபோத சாரம் 
    யாழ். வட்டுக்கோட்டை சிந்தாந்த மாணவன் (1957)
    யாழ்ப்பாணம் விவேகான்ந்த அச்சகம்   இணைப்பு
  • சிவஞானபோத ஆராய்ச்சி
    மறைமலையடிகள் (1958)
    சென்னை பூம்புகார் பதிப்பு 2005        இணைப்பு
  • சிவஞானபோதச் சிற்றுரையும் விளக்கமும் 
    பேரா. சபா.சிவப்பிரகாசம் பிள்ளை (1960).
    திருவெண்காட்டு வெண்காட்டுநாதர் திருக்கோவில்  இணைப்பு
  • சிவஞானபோதம்  த.ச.மீ  உரை
    துறைசை ஆதீனப் புலவர் த.ச.மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் (1970-73)
    திருவாவடுதுறை ஆதீனம்
    சாதன இயல் (1972)  இணைப்பு  பயனியல் (1973)   இணைப்பு
  • சித்தாந்த சைவநெறித் திறவுகோல் (சிவஞானபோத விளக்கத்துடன்)
    யாழ். சரசாலை ச.தியாகராசா (1971)
    ஆசிரியர்  இணைப்பு
  • சிவஞானபாடியத் திறவு
    க.வச்சிரவேல் முதலியார் (1977)
    டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பு  இணைப்பு
  • சைவ சித்தாந்தத் திறவு
    க.வச்சிரவேல் முதலியார்  (1980).
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைப்பு
  • சிவஞானபோதம் மூலமும் பதவுரையும்
    திரு. ந.ரா.முருகவேள் (1983)
    சேக்கிழார் பதிப்பகம் சென்னை  இணைப்பு 
  • சிவஞானமாபாடிய பொருள்நிலை விளக்கம் 
    மகாவித்துவான் அருணைவடிவேல் முதலியார் பெருமான் ( 1991)
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர் இணைப்பு
  • சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம்
    கொ. நீ.சிங்காரவேலு (1992)
    காஞ்சிபுரம் சைவ சித்தாந்தப் பெருமன்றம் இணைப்பு
  • சிவஞான போதமும் விளக்கவுரையும்
    பேராசிரியர் திரு. வை. முருகேசன் (1993)
    மெய்கண்டான் பண்ணை, திருவத்திபுரம், திருவண்ணாமலை. இணைப்பு
  • சிவஞானபோதச் செம்பொருள்
    முனைவர்.ச.சாம்பசிவனார் (2001)
    மதுரை வளவன் வெளியீடு  இணைப்பு
  • சிவஞானபோதச் சிற்றுரை எளியநடை.
    மட்டுவில் ஆ.நடராசா (2008)
    நூலாசிரியர். இணைப்பு
  • சிவஞானபோதத் தெளிவியல் 
    பூமணி சுவாமிகள் (2018)
    திருவாவடுதுறை ஆதீனம்  இணைப்பு
  • சிவஞானபோதம்
    கோப்பாய் கே.வி.குணசேகரம் (2016)
    இணைப்பு
  • Sivagnanabodham with Introduction and Translation
    J.M.Nallaswami Pillai (1895)
    Retyped Ebook of Original (No date) LINK1

    Raja Hariharaputrapillai Ed. 1906
    Trichinopoly Madduvarkulambaal Press. LINK2                   LINK3                LINK4
    Retyped EBook of 1906 Edition (No date) LINK5
    Dharmapuram Adheenam Edition (1945) LINK6          LINK7
    Tirunelveli Kazhagam Edition (1984)         LINK8            LINK9
    Online Reading at Shaivam.org                  Part1                Part2

  • வடமொழி சிஞாபோ. இலகுதீகை தமிழாக்கம்
    சிவாக்கிரயோகிகள், தஞ்சை பிரமானந்தசுவாமிகள் மொழி.
    (1928) 
    தஞ்சை சங்கரவிலாச சாரதா மந்திர பிர`ச் இணைப்பு1     இணைப்பு2
  • Śiva-Ñāna-Bōdham – A Manual Of Śaiva Religious Doctrine
    GORDON MATTHEWS  (1948)  LINK
  • The Cult of Siva or Lessons in Sivagnanabotham
    V.P. Kanthimathinatha Pillai, (1961)
    Tinnevelly The South India Saiva Siddhanta Works Publishing Society LINK
  • Sivajnana Botham – Metaphysics of Saiva Siddhanta
    Thiruvilankar Canagarayar (1961)   LINK
  • Sivagnanabodham Translation
    T.N. RAMACHANDRAN (No date)
    Shaivam.org TO READ
  • Sanskrit Sivagnanabodha English Translation.
    Shaivam.org (No date)
    TO READ
  • Sivagnanabodham Essay
    H.A. Popley (1911)
    Madras Christian College Magazine   TO READ

  • சிவஞானபோதம் கட்டுரை
    காசிவாசி செந்திநாத ஐயர்
    சித்தாந்தம் – 1913 ௵ – அக்டோபர் ௴ இதழ்  இணைப்பு

  • தமிழ்ச் சிவஞான போத வரலாறு  கட்டுரை
    பொ-முத்தையா பிள்ளை
    சித்தாந்தம் – 1914 ௵ – ஏப்ரல் ௴ இதழ்  இணைப்பு

  • சிவஞானபோத முதனூல் விளக்கம்
    துடிசைகிழார் அ.சிதம்பரனார்
    சித்தாந்தம்  1914 ௵ யூன் / செப்டம்பர் ௴ இதழ்   இணைப்பு

  • வடமொழிச் சிவஞான போதத்தின் காலம் கட்டுரை
    மு. அருணாசலம் அவர்கள் 
    சித்தாந்தம்  1964 ௵  மே ௴ இதழ்  இணைப்பு

  • சிவஞான பாடிய விளக்கம்-இளைஞருக்கு கட்டுரை.
    தி.கி. நாராயணசாமி நாயுடு
    சித்தாந்தம் – 1964 ௵ – யூன், யூலை, ௴ இதழ் இணைப்பு

  • சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே மொழிபெயர்ப்பல்ல
    திரு.ம.பாலசுப்பிரமணிய முதலியார் (1965)
    சென்னை  சைவசித்தாந்த சமாசம்
    இரண்டாம் பதிப்பு (2000)       இணைப்பு

  • தமிழ்ச் சிவஞானபோதம் தமிழ் முதல் நூலன்று; மொழிபெயர்ப்பே!
    நெல்லை ஈசுரமூர்த்திப்பிள்ளை (1967)       வாசிக்க

  • சிவஞானபோத மாபாடியம் அச்சான கதை 
    நெல்லைச் சொக்கர் வலைத்தளம் (2011) வாசிக்க

  • சிவஞானமாபாடிய  வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!
    சிவத்திரு பரணீதரன் (2024) முகநூல் பதிவு.    வாசிக்க

  • சிவஞானபோதம்  சுவடி-03 (ஏட்டெண் 9இல் நூல் தொடங்குகிறது.)      வாசிக்க

  • சிவஞானபோதம்  சுவடி- 04 சிவஞான போதம் : அம்பலவாண தேசிகர் உரை    வாசிக்க

  • சிவஞானபோதம்  சுவடி-05-சிவஞான போதம் மூலமும் உரையும்-உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. TO READ AND DOWNLOAD

  • சிவஞானபோதம்  சுவடி ஓலைச்சுவடி எண் – UVSLMS000447 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை TO READ AND DOWNLOAD

  • சிவஞானபோதம்  சுவடி ஓலைச்சுவடி எண் – UVSLMS000628 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை TO READ AND DOWNLOAD

  • சிவஞானபோதம்  சுவடி ஓலைச்சுவடி எண் – UVSLMS000574 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை  TO READ AND DOWNLOAD

  • சிவஞானபோதம்  சுவடி ஓலைச்சுவடி எண் – UVSLMS000544 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை    TO READ AND DOWNLOAD

  • சிவஞானபோதம்  சுவடி ஓலைச்சுவடி எண் – UVSLMS000253 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை   TO READ AND DOWNLOAD

  • வடமொழி சிவஞானபோதத்துக்கு தமிழ் உரை ஓலைச்சுவடி -ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம் , சென்னை; ஓலைச்சுவடி எண் –UVSLMS001205

    TO READ AND DOWNLOAD

  • மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் -தெளிவுரை: முனைவர். நல்லூர் சரவணன் -ஒலிப்பேழை
    DOWNLOAD

  • வடமொழி சிஞாபோ தத்துவப்பிரகாசிகை உரை.
    பிரம்மநிட்டை பண்டிதர் வி.குப்புசுவாமி மகரா`ச் (1916)
    சிறீலசிறீ ராம.வீராசுவாமிராசு, தஞ்சை வித்தியாவினோதினி முத்திரசாலை.
    வேதாந்தப் பார்வையில் எழுதப்பட்டது.   இணைப்பு1  இணைப்பு2


  • சிவஞான போதம் வேதாந்த தீபிகை உரை 
    திருத்துருத்தி இந்திரபீட மாணாக்கர் பழனிச்சாமி சுவாமிகள், வடமொழி சிஞாபோ  திருவையாறு இலட்சயானந்த உரை (1922)
    கும்பகோணம் `ச்டார் அச்சுக்கூடம். மெய்கண்டாரின் சைவசித்தாந்தத்தை மறுத்து ஏகான்மவாத நோக்கில் எழுதப்பட்டது. இணைப்பு1   இணைப்பு2

     

  • சிவஞான போத  தெளிபொருள் விளக்கவுரை  
    கோ. வடிவேலு செட்டியார் (1929)
    வேதாந்தப்பார்வை கொண்டது.
    கொழும்பு தாளையான் அச்சக சிற்றுரைப் பதிப்பு இணைப்பு

     

  • சிவஞான போதம் வ..சி உரை
    வ.உ.சிதம்பரம்பிள்ளை உரை (1935)
    ஆ.இரா. வேங்கடாசலபதி (மறுபதி. 1999), தூத்துக்குடி வ.உ.சி. சமூக அறிவியல் நிறுவனம். வேதாந்த சமரசப் பார்வையில் எழுதப்பட்டது.
    வாசிக்க: இணைப்பு1       இணைப்பு2


  • சிவஞான போதம்  வேதாந்தப் பிரகாச உரை,
    சின்மயானந்த சுவாமிகள் (1957)
    பிரம்மானந்த சுவாமிகள் மடம், மதுரை
    ஏகான்மவாதப் பார்வையில் எழுதப்பட்டது இணைப்பு


  • சிவஞானபோதம்  மறைபொருள் விளக்கம்
    பொன். கோவிந்தசுவாமி (1970)
    பிரம்மஞான சங்கத்தின் (Theosopical Society) மெய்யியல் நோக்குநிலையில் பொருள் கூறப்பட்டது. இணைப்பு


  • சிவஞானபோதம் விளக்கவுரை
     
    தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் (2013)
    திருச்சி துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கம்
    தமிழ்ச்சித்தர் சைவ மரபுகளில் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது.
    வாசிக்க: இணைப்பு1       இணைப்பு2

  • சிவஞானபோதம் -தருமபுர ஆதீனம் உரை  (1941)
    பாகம் 2 முத்தய்யாபிள்ளை, பாகம் 3 மா.வெ.நெல்லையப்பபிள்ளை, பாகம் 4  ஈசுவரமூர்த்திபிள்ளை அவர்கள்


  • சிவஞானபோதம் உரையும் வடமொழி சிஞாபோ தமிழுரையும்
    துறைசை ஆதீனப் புலவர் த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் (1949)
    திருவாவடுதுறை ஆதீனம்.

     

  • சிவஞானபோதம் சூத்திரமும் உரையும்
    சிதம்பரசுவாமிகள் உரை (1955)
    முக்தானந்த சுவாமிகள் (பதி.), பாண்டியன் அச்சகம்

     

  • சிவஞானமாபாடியம்
    டாக்டர்.ச.வே.சுப்பிரமணியன் பதிப்பு (1986)
    உலகத் தமிழ்க் கல்வி இயக்கம்

  • சிவஞானபோதம்  கந்தபுராண மேற்கோள், திருவாதவூரடிகள் புராண மேற்கோள் உரை.
     யாழ். செல்லையா சிவபாதம் (1999)
    காலையடி ஞானவேலாயுதசுவாமி கோவிற் பரிபாலன சபை.

  • சிவஞானபோதம்
    பேராசிரியர்,முனைவர் பெரு.தியாகராசன் தெளிவுரை.
    கழக வெளியீடு

  • சிவஞானபோதம்
    சித்தாந்தரத்தினம் சிவ.மு.பாலசுப்பிரமணியன் உரை 
    நர்மதா பதிப்பகம்
  • சிவஞானபோதம் வினா விடை 
    முனைவர் திருமதி கோமதி சூரியமூர்த்தி
    சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம்.
  • சிவஞானபோதம் பதவுரை தெளிவுரை
    திருக்குறள்வேள் ஜி. வரதராஜன்
    பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்
  • சிவஞானபோதம்
    முனைவர் ந.இரா.சென்னியப்பனார் உரை
  • திருமந்திரமும் சிவஞானபோதமும் ஓர் ஒப்பு நோக்கு ஆய்வு
    சைவநன்மணி நா.செல்லப்பா அவர்கள்
    மணிமேகலைப் பிரசுரம்
  • சிவஞானபோதசூத்திர விவரணம்
    சிவாத்மசோதி முனிவரின் வடமொழி சிஞாபோ உரை.
    தஞ்சாவூர் மகால் நூலகம்.
  • வடமொழி தென்மொழி சிவஞானபோதம் ( மூலமும் உரையும் )
    சிவஸ்ரீ தில்லை  கார்த்திகேய சிவம்.
    ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் , கள்ளக்குறிச்சி
  • சிவஞானபோதச் சிற்றுரை அருஞ்சொற்பொருள் அகரவரிசை 
    துறைசை ஆதீன வித்துவான் திரு.வே.மாணிக்கவாசகம் பிள்ளை
    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
  • ECHOS OF  SIVAGNANABODHAM
    K.Ganesalingam Commentary
  • சிவஞான மாபாடியம் நுண்பொருள் விளக்கம் 
    சித்தாந்தசரபம் ஆ.ஆனந்தராசன் பெருமகனார்
  • சிவஞானமாபாடியம் நல்லூர் சரவணன் உரை
    சைவசித்தாந்தப் பெருமன்றம்