சிவஞானபோதத்துக்கான வழிநூலாகத் தோன்றிய நூல் சிவஞானசித்தியார். “சித்திக்கு மிஞ்சிய நூலும் இல்லை” என்று சைவத்தமிழரிடம் வழங்கும் வழக்கு இந்நூலின் பெருமையைச் சொல்லும். மெய்கண்ட தேவநாயனாரின் சீடரான அருணந்தி சிவாசாரியார் சக ஆண்டு 1175இல் (பொபி 1253இல்) இந்நூலை அருளிச்செய்தார்.
இந்நூல் பரபக்கம், சுபக்கம் எனும் இரு பிரிவுகளைக் கொண்டது. 301 விருத்தப்பாக்களால் ஆன பரபக்கம் பிறமதங்களிலுள்ள கருத்துக்களை நிராகரிக்க, 328 விருத்தப்பாக்களைக் கொண்ட சுபக்கம் சைவசித்தாந்தத்தை தருக்க பூர்வமாக நிறுவுகிறது.
சுபக்கம்
சிவஞானபோதம் போலவே பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன் எனும் நான்கு இயல்களைக் கொண்டது. அதற்கு முன் உள்ள பாயிரமும் அளவையியலும் சிறப்பானவை. சைவசித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளை வரையறுப்பவை.
சித்தியாருக்கு 15 – 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிகப்பழைய உரைகளான சிவஞானசித்தியார் ஞானாவரணவுரை, குருஞானசம்பந்தரின் ஞானாவரண விளக்கம், வெள்ளியம்பலத் தம்பிரானின் அரும்பத விளக்கம் என்பன இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. பின்னாளில் எழுதப்பட்ட முதன்மையான அறுவர் உரையைக் கொண்டு சித்தியாரைக் கற்பது வழக்கமாக உள்ளது. அறுவர் உரை எழுதியோர்:
1. மறைஞானதேசிகர் (16ஆம் நூற்.)
2. வீழிச் சிவாக்கிரயோகிகள் (விருத்தியுரை)
– 1560கள்.)
3. நிரம்பவழகிய தேசிகர் (16ஆம் நூற்.)
4. திருவண்ணாமலை ஆதீனத்து யாழ்ப்பாண ஞானப்பிரகாச முனிவர் (17ஆம் நூற்.)
5. சிவஞான முனிவர் (1753 – 1785)
6. சுப்பிரமணிய தேசிகர் – 1869 -1888 (பதவுரை)
வேறுபல தமிழக, இலங்கை அறிஞர்களால் பின்னாளில் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன.
பரபக்கம்
பரபக்கம் என்பது பிறமதக்கொள்கைகள் இன்னதென விளக்கி, அவற்றுக்கான சைவ சமயத்தின் மறுப்புரைகளைப் பதிவுசெய்வது. சித்தியாரின் பரபக்கத்தில் அப்போது நிலவிய 14 சமயங்கள் மறுக்கப்பட்டு, சைவசித்தாந்தம் நிறுவப்படுகின்றது. அவற்றில் நான்குவகைப் புத்த மெய்யியல்கள், உலகாய்தம், அமணம் (நிகண்டவாதம்), ஆசீவகம் எனும் புறப்புறச் சமயம் ஏழும், இருவகை மீமாஞ்சையும் (பட்டரியம், பிரபாகரியம்), மூவகை ஏகான்மவாதமும் (சத்தப்பிரமவாதம், மாயாவாதம், பாற்கரிய பேதாபேதம்), சாங்கியம், பஞ்சாராத்திர வைணவம் என்ற இரண்டும், ஆக பதினான்கு சமயங்களும் அவை.
பரபக்கத்துக்கு திருவொற்றியூர் தத்துவப்பிரகாசரது உரையே பெரிதும் விரும்பிப் படிக்கப்படுகின்றது. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், வேலப்ப பண்டாரம் ஆகியோரும் பரபக்கத்துக்கு உரையெழுதி உள்ளனர் என்று அறிகிறோம்.
இந்நூல்கள் அவற்றின் பழைமையாலும் மொழிநடையாலும் சமகாலத்தில் படிக்கக் கடினமானவை. எனினும் இவ்வுரை நூல்களைக் கசடறக் கற்றறிந்த சமகாலத்து அறிஞர்கள் பலர் இக்காலத்தமிழில் எளிமையான உரைகளைச் செய்திருக்கிறார்கள்.
ஆர்வமுள்ளோரின் கற்றலுக்கு வசதியாக, இணையத்தில் மின்னூல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் கிடைக்கும் சிவஞானபோதத்தின் மூலநூல்கள், உரைகள், ஆய்வுக்கட்டுரைகள், மொழியாக்கங்கள், மாற்றுக்கருத்துக்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி கற்கவிரும்பும் மாணவர்கள் தொடக்கநிலையினருக்கான பட்டியலிலுள்ள நூல்களிலிருந்து துவங்கலாம்.
குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
1. சிவஞானசித்தியார் சுபக்க வசனம்
முருகேசு போதகர்.
கிறித்தவ மதகுருவொருவரால் பிறமதத்தார் புரிந்துகொள்ள இலகுநடையில் எழுதப்பட்டது என்பதால் மிக எளிமையானது.
சவரிமுத்தும் மைந்தரும் வெளியீடு, யாழ்ப்பாணம் 1931 கோர்வை
சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம் 1952 .கோர்வை
காந்தளகம், சாவகச்சேரி, 1993 கோர்வை
2. சிவஞானசித்தியார் ஆராய்ச்சி
ந.சிவகுருநாதபிள்ளை
துறைசை ஆதீன வெளியீடு
அப்பர் அச்சகம், சென்னை, 1949 கோர்வை
3. சித்தி சுபக்கம் திருவிளங்க தேசிகர் உரை.
திருவிளங்கம் தேசிகர்,
சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1925 கோர்வை
கூட்டுறவுத் தமிழ் நூல் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ். 1971 கோர்வை1 கோர்வை2
4. சித்தி பரபக்கம் புதிய உரை
வசந்தகுமார் பதிப்பு
கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோவை, 2019 கோர்வை
சித்தி பரபக்கம் தத்துவப்பிரகாசர் உரை
சண்முகசுந்தரமுதலியார் பதிப்பு,
இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், 1876 கோர்வை
மயிலை அழக்கப்ப முதலியார் பதிப்பு 1910 கோர்வை1 கோர்வை2 கோர்வை3
வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பதிப்பு
திருவாவடுதுறை ஆதீனம், 1955 கோர்வை1 கோர்வை2 கோர்வை3
சித்தி சுபக்கம் சிவஞானசுவாமிகள் உரை
த.கைலாசபிள்ளை பதிப்பு
வித்தியானுபாலன யந்திரசாலை, யாழ்ப்பாணம் 1883 கோர்வை
இரண்டாம் பதிப்பு, 1896 கோர்வை1 கோர்வை2 கோர்வை3
சைவசித்தாந்த சமாசம், சென்னை, 1940 கோர்வை
சித்தி சுபக்கம் ஞானப்பிரகாசர் உரை
இணுவில் நடராச ஐயர் (பதி.) பெருமாள் நாடார் (வெளியீடு)
சின்னைய நாடார் அச்சியந்திரசாலை, திருப்பற்றூர், 1888 கோர்வை1 கோர்வை2வண்ணை அமரசிங்கப் புலவர் (பதி.) சண்முக ஐயர் (வெளி.)
மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1889 .கோர்வை1 கோர்வை2கே.பெ.சிங்காரவேலு முதலியார் பதிப்பு
கனகரத்னாகரம் பிர`ச், 1906 கோர்வை
சித்தி சுபக்கம் அறுவர் உரை
சிவஞானபோத அச்சியந்திரசாலை, சிந்தாதிரிப்பேட்டை (1888 – 1889).
சூத்திரம் 01 மட்டும் (1888) கோர்வை
பாகம் 01 (பாயிரம் – சூத்திரம் 02 வரை), 1888 கோர்வை1 கோர்வை2
பாகம் 02 (சூத். 3 – 6), 1889 கோர்வை
பாகம் 03 (சூத்.7 – 12), 1889 கோர்வை
பாகம் 02உம் 03உம் சேர்த்து கோர்வை
சித்தி சுபக்கம் சுப்பிரமணிய தேசிகர் பதவுரை
காஞ்சி நாகலிங்க முதலியார் பதிப்பு
சிறீநிகேதன அச்சியந்திரசாலை, சென்னை, 1897 கோர்வை
வித்துவான் சி.தாமோதரம்பிள்ளை பதிப்பு
விவேகானந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1915 கோர்வை
சித்தி சுபக்கம் உரை கழகப்பதிப்பு
சிவஞானமுனிவர் பொழிப்புரையும் தேசிகர் பதவுரையும்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நெல்லை, 1923 கோர்வை
மீள்பதிப்பு, 1954 கோர்வை
சித்தி சுபக்க உரை துறைசை ஆதீனப் பதிப்பு
த.ச.மீனாட்சிசுந்தரம்பிள்ளை (பதிப்பு)
சிவஞானமுனிவர் பொழிப்புரையும் சுப்பிரமணியதேசிகர் பதவுரையும்.
திருவாவடுதுறை ஆதீனம், துறைசை. 1954 கோர்வை1 கோர்வை2
சித்தி சுபக்கம் சிவாக்கிரயோகிகள் உரை.
த.ச.மீனாட்சிசுந்தரம்பிள்ளை பதிப்பு.
திருவாவடுதுறை ஆதீனம், துறைசை. 1965 கோர்வை
சித்தி சுபக்கம் முத்தையபிள்ளை உரை
தூத்துக்குடி முத்தையபிள்ளை சிவஞானமுனிவர் உரையைத் தழுவிச் செய்தது.
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914 கோர்வை1 கோர்வை2 கோர்வை3 கோர்வை4
ஊழியன் அச்சகம், காரைக்குடி, 1926 கோர்வை1 கோர்வை2
சித்தி சுபக்கம் தெளிவுரை
சி.சு.மணி அவர்கள்
அருணந்தி சிவம் அருட்பணி மன்றம், நெல்லை, 1995
1998 பதிப்பு.கோர்வை1 கோர்வை2
சிவஞானசித்தித் தெளிவு
திருவிளங்கம் தேசிகர் பொழிப்புரைத் தொகுப்பு
அமரர் சிறீவரதராசன் நினைவுமலர், 1999கோர்வை
சித்தி சுபக்கம் மூலமும் உரையும்
தினமலர் வலைத்தளம் (தி.இ) கோர்வை
Sivajnana Siddhiyar Supakkam Hindi & English Translation
Sivaramaiyar English Trans. & Sri.B.D.Jain Hindi Trans.
S.Kalyanasundaraiyar (Ed.)
Kafir Printers, Chennai, 1949 Link
[விரைவில் இணைக்கப்படும்.]
சித்தி முழுதும் ஆனந்தராசனார் உரை
ஒலிப்பேழை
சைவம். ஆர்க் வலைத்தளம்கேட்க
சித்தி – இராமலிங்கம் உரை
குளித்தலை சிவ இராமலிங்கனார் ஒலிப்பேழை
சைவம் ஆர்க் வலைத்தளம் கேட்க
சித்தி – குஞ்சிதபாதனார் உரை
துறைசை ஆதீனப்புலவர் குஞ்சிதபாதம் அவர்கள் ஒலிப்பேழை
சைவம் ஆர்க் வலைத்தளம் கேட்க
சித்தி – இலம்போதரனார் உரை
மரு.லம்போதரன் அவர்கள் ஒலிப்பேழை
சைவம் ஆர்க் வலைத்தளம் கேட்க
சித்தி – கோமதிநாயகனார் உரை
திரு.கோமதிநாயகம் அவர்கள் ஒலிப்பேழை
சைவம் ஆர்க் வலைத்தளம் கேட்க
[விரைவில் இணைக்கப்படும்]
சித்தி சுபக்கம் செந்தமிழுரை, அருணைவடிவேல் முதலியார்
சித்தி சுபக்கம் பேருரை, மேலல்வையூர் ஆ.பொன்னையா, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு
சித்தி ஆகமப்பேருரை, சிவத்திரு சபாராத்தினம் சிவாசாரியார், ஆத்திரேலியா சிவஞானத் தமிழ்ப் பேரவை வெளியீடு.
சித்தி பரபக்கம் உரை, முனைவர் பழ.முத்தப்பன், அகோர சிவாசாரியர் டிரஸ்ட் (நம்பிக்கை நிதியம்).
