சிவப்பிரகாசம் நான்காம் சந்தானகுரவரான உமாபதி சிவனாரால் இயற்றப்பட்டது. மெய்கண்ட சாத்திரங்களில் செழுமையில் மூன்றாமிடத்தில் வைத்து நோக்கப்படுவது. சிவஞானபோதம் முதல்நூல் என்றும் சிவஞானசித்தியார் வழிநூல் என்றும் சிவப்பிரகாசம் புடைநூல் என்றும் சொல்வது சித்தாந்த மரபு.
நூறு விருத்தப்பாக்களாலான இந்நூலில் முதல் ஐம்பதும் பொதுவதிகாரம் என்றும் அடுத்த ஐம்பதும் உண்மை அதிகாரம் என்றும் அறியப்படும். பொதுவதிகாரம் ஐந்து இயல்களாகவும், உண்மை அதிகாரம் ஏழு இயல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சித்தாந்தியரால் இந்நூல் நெடுநாள் பாராட்டப்பட்டுக் கற்கப்படுகின்றது. காவை அம்பலவாணத் தம்பிரான் இந்நூலின் கருத்துக்களை “குறள்வெண்பா நூறு” என்ற பெயரில் அருளியுள்ளார். மதுரை ஞானப்பிரகாசத் தம்பிரான், அவர் மாணவர் மதுரைச் சிவப்பிரகாசர், சிவஞான முனிவரின் மாணவரான காஞ்சி பிள்ளையார்பாளையத்து இலக்கணம் சிதம்பரநாத முனிவர் ஆகியோர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். மதுரைச் சிவப்பிரகாசர் உரை இவற்றில் அதிகம் பயிலப்படுகின்றது. இன்னும் சூரியனார் கோவில் ஆதீன மரபைச் சேர்ந்த அருணந்தி தேவனார், நல்லசிவதேவனார், திருவுருமாமலை அடிகள், திருவரங்கம் சிற்றம்பல நாடிகள், சத்திஞானப் பிரகாசர் என்று மேலும் பலர் உரையெழுதியுள்ளனர்.
பாடமுறையில் உண்மைவிளக்கம், திருவருட்பயனுக்குப் பின்னர் இந்நூலைக் கற்பது மரபாகும். இதை அடுத்து சித்தியும் அடுத்து போதமும் கற்றபின்னர், இவை தரும் அறிவு வெளிச்சத்தில் ஏனை நூல்களைக் கற்கும் போதம் கிட்டும்.
ஆர்வமுள்ளோரின் கற்றலுக்கு வசதியாக, இணையத்தில் மின்னூல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் சிவப்பிரகாசத்தின் மூலநூல்கள், உரைகள், மொழியாக்கங்கள், இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி கற்கவிரும்பும் மாணவர்கள் தொடக்கநிலையினருக்கான பட்டியலிலுள்ள நூல்களிலிருந்து துவங்கலாம்.
குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவப்பிரகாசம் மதுரை சிவப்பிரகாசர் உரை
சண்முகசுந்தர முதலியார் பதிப்பு.
தத்துவபோதினி அச்சுக்கூடம், 1872, கோர்வை
சைவ சித்தாந்த மகாசமாசம், சென்னை, 1940, கோர்வை
சிவப்பிரகாசம் திருவுருவமாமலை அடிகள் உரை
நெல்லை திருநாவுக்கரசு சுவாமிகள் மடத்து இராமலிங்கசுவாமிகள் பதி.
விக்டர்ப் பெயரிய யந்திரசாலை, சென்னை, 1908 கோர்வை1 கோர்வை2
சிவப்பிரகாசம் அருணந்திதேவனார் உரை
முனைவர். சிவபெருமான் பதிப்பு
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 2011 கோர்வை1 கோர்வை2
சிவப்பிரகாசம் திருவிளங்கம் உரை
கொழும்பு மு.திருவிளங்க தேசிகர் எழுதியது.
நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919 கோர்வை1 கோர்வை2
திருமகள் அச்சியந்திரசாலை, சுன்னாகம், 1933 (2ஆம் பதி.) கோர்வை1 கோர்வை2 கோர்வை3
கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம், 1974 (3ஆம் பதி.) கோர்வை1 கோர்வை2
சிவப்பிரகாசம் உரைநடை
துறைசை வித்துவான் த.ச.மீ.பிள்ளை
திருவாவடுதுறை ஆதீனம், 1960 கோர்வை
சிவப்பிரகாசம் சீர்மைக்கட்டுரை துறைசை வித்துவான் தே.ஆ.சிறீநிவாசன் உண்மை அதிகாரத்தின் மூன்றாஞ் சூத்திர ஆன்ம இலக்கணம் பற்றி எழுதப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம், 1966, கோர்வை
சிவப்பிரகாசம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை உரை
சிவத்திரு.ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை
சங்கரன் கோவில் சைவசித்தாந்த சபை, 246, வடக்கு ரதவீதி, சங்கரன் கோவில்
(தொடர்பு: G.N.கணபதி – +919003330094)
சிவப்பிரகாசக் கதவம் சிவபாலகணேசனார் இலங்கை சைவநெறிக் கழகம், 2018
