உண்மை விளக்கம், திருவருட்பயன், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார், சிவஞானபோதம், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்பனவற்றை அடுத்து அருணந்தி சிவனாரின் இருபா இருபஃதும், உமாபதி சிவனாரின் எஞ்சிய ஏழு நூல்களையும் கற்பது மரபு. அந்த ஏழு நூல்களில் வினா வெண்பா இருபா இருபஃது போலவே கேள்விவிடையாக இருப்பதால், அவை இரண்டும் சில நேரங்களில் இணைந்தே பயிலப்படுவதுண்டு.
சங்கற்பநிராகரணம் பரபக்கம் போலவே புறச்சமயங்களை நிராகரிக்கும் நூல். கொடிக்கவி, கோவில் திருக்கொடியேற்றங்களில் பாடப்படும் பெருமை வாய்ந்தது. இன்று இலங்கையின் சைவத்தமிழ் நிகழ்வுகளில் விடைக்கொடி ஏறும்போது கொடிக்கவியையும் இசைக்கிறார்கள்.
இவை தவிர, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம், போற்றிப்பஃறொடை, என்பன அவற்றின் சித்தாந்தச் செழுமையால் பதினான்கு சாத்திரங்களில் வைத்துப் போற்றிப் பேணப்படுகின்றன.
பதினான்கு சாத்திரங்கள் தவிர, துறைசை – தருமை ஆதீனங்களின் குரு – மாணாக்கர் வழிவந்த “பண்டார சாத்திரங்கள்” பலவுண்டு. சில நூல்களைக் கற்க அடிப்படையாய் அமைந்த “கட்டளை” எனும் வசனநடை நூல்களும் உண்டு. இவை தவிர, திருக்குறள், வாகீசமுனிவரின் ஞானாமிருதம், ஔவையார் பாடல்கள் முதலியன சித்தாந்தியரால் தங்கள் நூல் வரிசையில் வைத்துப் பயிலப்படும் நூல்கள் பல உள்ளன.
குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இருபா இருபஃது, அகவல், வெண்பா ஆகிய இருவகைப் பாட்டுக்களும் தலா பத்து என இருபது பாடல்களைக் கொண்டது. குருவுக்கும் மாணாக்கருக்குமான வினா – விடை வடிவில் முப்பொருள் உண்மையை விவரிக்கும் இந்நூலை, இரண்டாம் சந்தான குரவரான அருணந்தி சிவனார் பாடினார். சீகாழி தத்துவநாதர், துறைசை ஆதீன நமச்சிவாயத் தம்பிரான் என்போர் இந்நூலுக்கு உரை வரைந்துள்ளனர்.
இருபா இருபஃது நமச்சிவாயத் தம்பிரான் உரை
துறைசை ஆதீன முருகேசமுதலியார் பதிப்பு
சீவகாருணிய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1898, கோர்வை
இருபா இருபஃது நமச்சிவாயத் தம்பிரான் உரை இரண்டாம் பதிப்பு
“உண்மை விளக்கம் முதலியன” நூல்
துறைசை வித்துவான் த.ச.மீ.பிள்ளை பதிப்பு
திருவாவடுதுறை ஆதீனம், 1954, கோர்வை1 கோர்வை2
இருபா இருபஃது தமிழுரை with Irupa Irupahthu English Translation
சங்கரன்கோவில் ஈசுரமூர்த்திப்பிள்ளை தமிழ் உரை
J.M.Nallaswamipillai English Translation
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம் | Gnanasambandam Press, Dharmapuram, 1947, Link
இருபா இருபஃது விரிவுக்கட்டுரை
துறைசை வித்துவான் தே.ஆ.சிறீநிவாசாரியார் செய்த பொழிப்பும் விரிவுரையும் திருவாவடுதுறை ஆதீனம், 1955, கோர்வை1 கோர்வை2
இருபா இருபஃது விளக்கவுரை
திரு.ந.ரா.முருகவேள் அவர்களின் விளக்கவுரை
with Irupa Irupahthu English Translation by J.M.Nallaswamipillai (p.62)
ஞானசம்பந்தம் அச்சகம், தருமபுரம், 1977, கோர்வை
வினா வெண்பா உமாபதி சிவனாரால் இயற்றப்பட்ட நூல். ஆசிரியனும் மாணாக்கனும் முப்பொருள் பற்றி உரையாடுவது போல் வினாவிடை வடிவிலமைந்த நூல். 13 வெண்பாக்களால் ஆனது. வடிவ ஒருமை கருதி, இதை இருபா இருபஃதுவுடன் சேர்த்துக் கற்பதுண்டு.
வினா வெண்பாவும் போற்றிப் பஃறொடையும் உரை
ஈசுரமூர்த்திப் பிள்ளை உரை
மகாலட்சுமி விலாசம் பிர`ச், சென்னை, 1928, கோர்வை1 கோர்வை2 கோர்வை3
சைவ சித்தாந்த சபை, சங்கரன்கோவில், 2007 (மறுபதி.) கோர்வை
வினா வெண்பா செல்லத்துரை உரை
சைவப்புலவர், சித்தாந்தப்பண்டிதர், சைவத்திரு.இ.செல்லத்துரை
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், யாழ்ப்பாணம், 1966, கோர்வை
வினா வெண்பா உரையுடன்
தினமலர் வலைத்தளம் .கோர்வை
வினா வெண்பா சுவடி1 கோர்வை
வினாவெண்பா சுவடி2 கோர்வை
போற்றிப் பஃறொடையானது, தனது குருவான மறைஞானசம்பந்தரை சிவமாகக் கருதி, உமாபதி சிவனார் பாடிய பாடலாகும். இந்நூல் 196 பஃறொடை வெண்பாக்களால் ஆனது. மெய்யியல் நூலாக மட்டுமன்றி, ஒரு தோத்திர நூலாகவும் அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு பழைய உரை உண்டு. அது முருகேச முதலியாரால் பதிக்கப்பட்டிருக்கிறது.
போற்றிப்பஃறொடை உரையுடன் முருகேச முதலியார் பதிப்பு சீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1898 கோர்வை
போற்றிப்பஃறொடை உரையுடன்
தினமலர் வலைத்தளம், கோர்வை
வினா வெண்பாவும் போற்றிப் பஃறொடையும் உரை ஈசுரமூர்த்திப் பிள்ளை உரை மகாலட்சுமி விலாசம் பிர`ச், சென்னை, 1928, கோர்வை1 கோர்வை2 கோர்வை3
சைவ சித்தாந்த சபை, சங்கரன்கோவில், 2007 (மறுபதி.) கோர்வை
சித்தாந்த சாத்திரங்களில் மிகச்சிறியது. நான்கு வெண்பாக்களை மாத்திரம் கொண்ட நூல். உமாபதி சிவனாரால் தில்லைக்கொடி ஏறாமல் இருந்தபோது இதைப்பாடி தானே கொடியேறச் செய்தார் எனும் தொன்மத்துடன் தொடர்புடையது. இலங்கைச் சைவநிகழ்வுகளில் விடைக்கொடி ஏற்றப்படும்போது பாடப்படும் பெருமை வாய்ந்தது.
கொடிக்கவி ஈசுரமூர்த்திப்பிள்ளை உரை துறைசை வித்துவான் சிவத்திரு.ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை சித்தாந்தச் சைவச் செந்நெறிக் கழகம், நெல்லை, 1958 (மறுபதி.), கோர்வை
கொடிக்கவி செல்லத்துரை உரை சைவப்புலவர், சித்தாந்தப்பண்டிதர், சைவத்திரு.இ.செல்லத்துரை வடமாநிலச் சைவ இளைஞர் மாமன்றம், 1964, கோர்வை
கொடிக்கவி உரையுடன்,
தினமலர் வலைத்தளம், கோர்வை
இது உண்மைவிளக்கத்திலும் வேறான நூல். உமாபதி சிவனாரால் ஆக்கப்பட்டது. ஆன்மா இறைவனை அடைவதற்கு சித்தாந்தம் சொல்லும் “தசகாரியம்” எனும் வழிமுறையை விவரிக்கும் இன்னொரு சிறிய நூல். இதில் ஆறு பாடல்களே உள்ளன.
உண்மைநெறி விளக்கம் ஈசுரமூர்த்திப்பிள்ளை உரைசித்தாந்த பண்டித பூ^சணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை உரை
சீகாழி பீ.அகோரம்பிள்ளை பதிப்பு, 1939, கோர்வை
உண்மைநெறி விளக்கம் செல்லத்துரை உரை,
சைவப்புலவர், சித்தாந்தப்பண்டிதர், சைவத்திரு.இ.செல்லத்துரை உரை
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், வண்ணார்பண்ணை, 1966, கோர்வை
உண்மைநெறி விளக்கம் ஞானசம்பந்தன் உரை,
சென்னிமலை அ. ஞானசம்பந்தன் உரை
அருள்நெறித் திருக்கூட்டம், ஈரோடு, 2011 (2ஆம் பதி.) கோர்வை
உண்மைநெறி விளக்கம் உரை
தினமலர் வலைத்தளம் .கோர்வை
உமாபதி சிவனார் சிவவடிவான தன் குரு மறைஞானசம்பந்தருக்குத் தன் நெஞ்சைத் தூது விடுமாறு அமைந்த பாடல். தமிழில் தோன்றிய முதல் தூது இலக்கியமாகப் போற்றப்படுவது. இதைப்பின்பற்றி சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது, சிதம்பரதேசிகர் நெஞ்சுவிடுதூது எனப் பல நூல்கள் பின்னாளில் தோன்றியுள்ளன.
நெஞ்சுவிடுதூது பதவுரை
அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் பதவுரை
முருகேச முதலியார் பதி.
சீவகாருணிய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1898, கோர்வை
நெஞ்சுவிடுதூது உரையுடன்
தினமலர் வலைத்தளம், . கோர்வை
சித்தியார் பரபக்கத்தை ஒத்து புறச்சமயங்களை நிராகரித்து சைவசித்தாந்தத்தைத் தாபிக்கும் நூல் இது. உமாபதி சிவனார் இயற்றியது.
சங்கற்ப நிராகரணம் உரையுடன்
தினமலர் வலைத்தளம், கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி1 கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி2 கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி3 கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி4 கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி5 கோர்வை
சங்கற்ப நிராகரணம் சுவடி6 கோர்வை
