மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.
1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும் படிப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் விளங்குகின்றது.திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலாகும். 1A) திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் பதிப்பிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுப் பதிப்பு நூல் DOWNLOAD LINK1A DOWNLOAD LINK1B DOWNLOAD LINK2A DOWNLOAD LINK2B DOWNLOAD LINK3A DOWNLOAD LINK3B 1B)…
மெய்கண்ட சாத்திரம் முழுவதுமான நூல் பதிப்புக்கள் 1) மெய்கண்ட சாத்திரம் – மூலமும் உரையும் – உரையாசிரியர் முனைவர் அ.அறிவொளி – வர்த்தமானன் பதிப்பகம்- 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017( வடக்கு உஸ்மான் சாலை விவேக்ஸ் அருகில், KENCES TOWERS பக்கத்தில் தொடர்ப்பிலக்கம் – 28140347/28144995/43502995/ +919094963125/+919941863542/+919380630192 ; இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.2) மெய்கண்ட சாத்திரங்கள் – உரையாசிரியர் சித்தாந்தச் செம்மணி – முனைவர் பழ.முத்தப்பன்– உமா பதிப்பகம் – 18/171, பவளக்…
சிவத்திரு பரணீதரனார் அவர்கள், சிவஞானமாபாடிய கர்த்தராகிய மாதவச்சிவஞானமுனிவர் வருணத்துவம் நீக்காதென்ற கொள்கை உடையவர் என்று சாதித்த சில சாதிவாதச் சைவருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தற்காலத்தில் வழக்கில் உள்ள சிவஞானமாபாடியம் குறித்த விளக்கங்களை முகநூலில் 02 – 07 – 2024 ஆம் நாள் எழுதியுள்ளார். தற்கால சிவஞானமாபடியப் பதிப்பில் காணப்படும் வருணத்துவம் குறித்த பகுதிகள் இடைச்சேர்க்கையாக உள்ளது குறித்து அருணைவடிவேல் முதலியார் பெருமான் முதலியோர் எடுத்துக்காட்டி விளக்கியவற்றைக் குறிப்பிட்டு, சிவஞானமாபாடியம் அச்சேற்றப்பட்ட வரலாற்றை விளக்கி எழுதியுள்ளார்….
சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று…
குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும் இல்லை.இதனால், அவை PDF ஆக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பூர்வ காமிக ஆகமம் ஏற்கனவே தமிழ்மொழிபெயர்ப்புடன் இணையத்தில் உள்ளன.அவற்றுக்குரிய சொடுக்கிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான ஆகமங்கள் தமிழிலும்-ஆங்கிலத்திலும் உள்ளன. அவற்றின் சொடுக்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இணையத்திலுள்ள சைவசமய ஆகம நூல்களையெல்லாம் இயன்றவரை இங்கு தொகுத்துள்ளோம். சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களும்…