சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…
கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…
தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது.
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது.
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.