இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!
இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக…
