உண்மைவிளக்கம், சைவ சித்தாந்தம் பயில்வோர் முதலாவதாகக் கற்கும் நூல். 36 தத்துவங்கள், திருவைந்தெழுத்து, ஆடல்வல்லான், குருலிங்கசங்கம வழிபாடு முதலிய சித்தாந்த அடிப்படை விடயங்களை எளிமையாகச் சொல்வதால், இந்நூல் முதலில் கற்கப்படுகிறது. சித்தாந்தக் கல்வி முடிந்தபின்னர் மீட்டலுக்காக இந்நூலைக் கற்பதும் உண்டு.
உண்மைவிளக்கத்தை எழுதியவர் மனவாசகங்கடந்தார். இவர் மெய்கண்டாரின் 49 மாணவரில் ஒருவர். திருவதிகையைச் சேர்ந்தவர். அருணந்தி சிவனாருடன் ஒன்றாகக் கற்றவர்.
உண்மைவிளக்கம் 54 வெண்பாக்களைக் கொண்டது. சுத்த வினா என்ற செய்யுள் எழுப்பும் ஏழு அடிப்படையான வினாக்களுக்கான பதிலே இந்நூல். அவை ஏழும்:
“36 தத்துவம் எது? ஆணவம் எது? மாறாத வினை ஏது? இவற்றின் வேறு ஆகாத ஆன்மா எது? இறைவன் எது? நடனம் எது? அஞ்செழுத்து எது?”
இவ்வினாக்களை ஒன்பதாக விரித்துச்சொல்வோரும் உளர்.
உண்மைவிளக்கத்துக்கு துறைசை ஆதீனத்து நமச்சிவாயத் தம்பிரான் எழுதிய பழைய உரை ஒன்றும், சில புதிய உரைகளும் உள்ளன. எல்லா மெய்கண்ட சாத்திரங்களும் 36 தத்துவங்களை சிவத்தில் துவங்கி ஐம்பூதத்தில் முடிக்க, தன் நூலை ஐம்பூதத்தில் துவக்கி சிவத்தில் முடிக்குமாறு இவர் அமைத்திருப்பதால் சித்தாந்தம் கற்கப்புகுவோருக்கு 36 தத்துவங்களை எளிதில் புரிந்துகொள்ள இயலும்.
ஆர்வமுள்ளோரின் கற்றலுக்கு வசதியாக, இணையத்தில் மின்னூல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் உண்மைவிளக்கத்தின் மூலநூல்கள், மொழியாக்கங்கள், இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி கற்கவிரும்பும் மாணவர்கள் தொடக்கநிலையினருக்கான பட்டியலிலுள்ள நூல்களிலிருந்து துவங்கலாம்.
குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மை விளக்கம் முதலியன
உண்மைவிளக்கம் மூலமும் நமச்சிவாயத் தம்பிரான் உரையும்.
இருபா இருபது மூலமும் பழைய உரையும், வேறு சில சித்தாந்த நூல்களும் அடங்கியது.
த.சமீ.பிள்ளை பதிப்பு
திருவாவடுதுறை ஆதீனம், துறைசை, 1954 கோர்வை
உண்மைவிளக்கம் செல்லத்துரை உரை
சைவப்புலவர், சித்தாந்தப்பண்டிதர் இ.செல்லத்துரை உரை,
அகிலஇலங்கை சைவப்புலவர் பட்டதாரிகள் சங்கம், வண்ணார்பண்ணை, 1963 கோர்வை
உண்மை விளக்கம் வச்சிரவேலார் உரை
துறைசை வித்துவான் வச்சிரவேல் முதலியார் எழுதியது,
With English Trans. Of J.M.Nallaswamipillai
கூட்டுறவு தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம், 1971 கோர்வை
உண்மை விளக்கம் தெளிவுரை
கு.வைத்தியநாதன் உரை, 1992
துறைசை ஆதீன சித்தாந்தப் பயிற்சி மையம், திருவிடைமருதூர் கோர்வை1 கோர்வை2
உண்மை விளக்கம் தேமொழியார் உரை.
தவத்திரு தேமொழியார் சுவாமிகள் தெளிவுரை
அருட்பண்ணை அறக்கட்டளை, சென்னை, 1996 கோர்வை
உண்மை விளக்கம் பொருளுரையும் விரிவுரையும்
கழகப்புலவர் ஆ. பொன்னையா அவர்கள்,
நெல்லை தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2005 கோர்வை
Unmai Vilakkam English Translation
By J.M.Nallaswamipillai (from p.58)
துறைசை வித்துவான் வச்சிரவேல் முதலியார் உரையுடன் வெளியிடப்பட்டது.
Coop. Tamil Publication & Selling Association, Jaffna, 1971 Link
Unmai Vilakkam – The Exposition of Truth C.N.Singaravelu Saiva Siddhanta Maha Samajam, Madras, 1981 Link
உண்மை விளக்கக் கதவம் ந.சிவபாலகணேசனார் சைவசித்தாந்த திருவாவடுதுறை ஆதீனச் சைவசித்தாந்தப் பயிற்சி மையம், கொழும்பு.
