திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும்

மெய்கண்ட சாத்திரங்களில், மெய்கண்டாருக்கும் சிவஞானபோதத்திற்கும் நூறாண்டுகள் முற்பட்டவை, திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும். தமிழ் மெய்கண்ட சித்தாந்தத்தின் முதல்வராக மெய்கண்டாரையே போற்றும்போதும், அதற்கும் முன்பே தமிழ்நிலத்தில் நெடுநாளாய் நீடித்துவந்த மெய்யியல் சைவசித்தாந்தம் என்பதற்கான முதன்மைச் சான்றுகள் இந்நூல்களாகும். இவற்றுக்கும் முற்பட்ட வாகீச முனிவரின் “ஞானாமிருதம்” நூலும் இந்த வரிசையில் முதன்மையாக வைத்தெண்ணத்தக்கது. (இதிலுள்ள சிறிய மெய்யியல் முரணால் ஞானாமிருதம் மெய்கண்ட சாத்திர நூலில் வைத்தெண்ணப்படவில்லை. கற்றோரிடம் அதை அறிக.)

 

திருவுந்தியார் 45 பாடல்களைக் கொண்டது. “உந்தீ பற” என முடிவதால் உந்தியார் என அறியப்படுகிறது. இதை இயற்றியவர் திருவியலூர் உய்யவந்த தேவர். அவர் ஆளுடையதேவர் என்பவரை மாணாக்கராகக் கொண்டு அவருக்காக இந்நூலை யாத்தார் என்று ஒரு தொன்மம் நிலவுகின்றது. மெய்கண்டாரின் சந்தானத்தை வடநாட்டிலிருந்து துவங்குவது போல், உய்யவந்தாரும் வடநாடிருந்து வந்த ஒரு குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்வதுண்டு. துறைசை ஆதீனச் சிற்றம்பலத் தம்பிரான் எழுதியதாக நம்பப்படும் ஒரு பழைய உரை உந்திக்கு உண்டு.

 

திருக்களிற்றுப்படியார் திருவுந்தியாருக்கு விரிவென அமைந்த 100 பாடல்களைக் கொண்டது. இதைப் பாடியவர் ஆளுடைய தேவரின் சீடரான திருக்கடவூர் உய்யவந்த தேவர். பிறந்த குடி கொண்டு இழிவுசெய்யப்பட்ட இவர் எழுதிய நூலை, தில்லைக் கருவறையின் யானை உருவம் பொறித்த படிமீது இவர் வைக்க, அக்கல்லானை உயிர்கொண்டு அதைத் தூக்கி இறைவன் திருவடியில் வைத்ததாகத் தொன்மம். எனவே “திருக்களிறுப்படியார்” எனும் பெயர் நூலுக்கு உண்டானது என்பர். இந்நூலுக்கும் சிற்றம்பலத் தம்பிரான் உரை செய்துள்ளார்.

குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1. உந்தியும் களிறும் வெள்ளைவாரணர் உரை
வெள்ளைவாரணனார் விளக்கவுரை

காசி மடம், திருப்பனந்தாள், 1982,  கோர்வை1    கோர்வை2     கோர்வை3   கோர்வை4 மாணவர் பதிப்பகம், சென்னை (2ஆம் பதி.) ,2014கோர்வை 

2. உந்தியும் களிறும் கா.சு பிள்ளை உரை
கா.சுப்பிரமணியம் பிள்ளை உரை.

சிவஞானபோத கா.சு.பிள்ளை உரையும் அடங்கியது.
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமை ஆதீனம், தருமபுரம், 2010 கோர்வை

உந்தி சிவப்பிரகாசனார் உரை
துறைசை ஆதீன சிற்றம்பலத்தம்பிரான் (எ) சிவப்பிரகாசனார் உரை க. முருகேச முதலியார் பதிப்பு சீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1898,  கோர்வை1   கோர்வை2

களிறு சிவப்பிரகாசனார் உரை துறைசை ஆதீன சிற்றம்பலத்தம்பிரான் (எ) சிவப்பிரகாசனார் உரை க.முருகேச முதலியார் பதிப்பு சீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1898, கோர்வை

உந்தியும் களிறும் சித்தாந்தபோத ரத்னாகர உரை
கா.ஆலாலசுந்தரம் பிள்ளை புத்துரை
காஞ்சி பிள்ளையார்பாளையம் ஐயங்குளம் நாராயணசாமிப்பிள்ளை பதி. (1918) கோர்வை1   கோர்வை2 

மறுபதிப்பு ஆலாலசுந்தரம்பிள்ளை டிர`ச்ட், காஞ்சிபுரம், 1999, கோர்வை

உந்தியும் களிறும் உரையுடன்,
வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்கமுதலியார் பதிப்பு,
செங்குந்தன் அச்சுக்கூடம், சென்னை, 1921 (3ஆம் பதி.) கோர்வை1  
கோர்வை2

திருவுந்தியார் கனகசபை உரைவிளக்கம்
சிவப்பிரகாசர் உரைக்கு வித்துவான் பொன்.அ.கனகசபை எழுதிய உரைவிளக்கமும் பொழிப்பும்
கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம், 1970, கோர்வை

உந்தியும் களிறும் வைத்தியநாதன் உரை.
உண்மைவிளக்கம், உந்தி,களிறு மூன்று நூல்கட்கும் கு.வைத்தியநாதன் எழுதிய உரை
துறைசை ஆதீன சித்தாந்தப் பயிற்சி மையம், திருவிடைமருதூர், 1998, கோர்வை

திருவுந்தியார்  உரைச்சுவடி
க. மாசிலாமணி தேசிகர் முறைமாற்றி அமைத்து எழுதிய உரை. 
திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம், மதுரை, 1968, கோர்வை

திருவுந்தியார் உரையுடன்.
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகமும் பன்னிரு திருமுறை ஆய்வு மையமும், கோர்வை

Thiruvunthiyar Tamil original text with English Translation – Rise and Fly 
By Dr. B. Natarajan Shri Kashi Matham, Thiruppanandal, 1958, Link