|

சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் கழகத்தாரால் 10-10-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு

மாணவரிடம் சைவசமயத் தெளிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் கல்லூரி அதிபரின் அனுமதியைப் பெற்று, வகுப்புத் தோறும் சைவசமய ஐயம் தெளிதல் வகுப்புக்களை சிறப்புற நடத்தியிருந்தனர். எமது சமயத்தின் பெயர் சைவசமயம் என்று உணர்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும், சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நாள்தோறும் வழிபட்டுவருவதன் தேவைப்பாட்டினையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்நிகழ்வை நடத்தக்கூடியதாகவிருந்தது.இதுபற்றிய செய்தி 30 - 10 - 2013ஆம் நாளன்று வெளியாகிய வீரகேசரி நாளிதழில் கழகத்தாரினால் அனுப்பிவைக்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகப் படங்களோடு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Similar Posts

  • | |

    செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்

    தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…

  • |

    இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடு

    செம்டெம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை சைவநெறிக் கழகம், நாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தினுடனும் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி – இரத்மலானையில் விளங்கும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சிவத்திரு.மகாலிங்கக்குருக்கள் பெருமகனாரினை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைப்பித்து சைவசமய தீக்கை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. comments

  • | | |

    திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம்…

  • |

    மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

    மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம்  சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன்  பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020)  இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில்,  சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால்…

  • | | |

    இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!

    இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ”ஸ்ரீ குருபூஜா விழா” என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று,  விவேகானந்த சபை மண்டபத்தில்  விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த  இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ”காவிக்கொடி” அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில்…

  • |

    ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

    ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…