காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு
தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும். 05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.