நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்
தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே அருள் உண்டென்றும் இவ்வுரையில் விளக்கியிருத்தார்.
கொழும்பு தெமட்டக்கொடை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற நவராத்திரியை முன்னிட்டான வாணிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நவராத்திரியின் தத்துவ விளக்கத்தினைச் சிற்றார்க்கும் பெரியாருக்கும் ஏற்றாற்போல் கணினி அரங்க அளிக்கையூடாக கழகத்தின் தலைவர் எடுத்தியம்பினார்.