| |

நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே அருள் உண்டென்றும் இவ்வுரையில் விளக்கியிருத்தார்.

கொழும்பு தெமட்டக்கொடை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற நவராத்திரியை முன்னிட்டான வாணிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நவராத்திரியின் தத்துவ விளக்கத்தினைச் சிற்றார்க்கும் பெரியாருக்கும் ஏற்றாற்போல் கணினி அரங்க அளிக்கையூடாக கழகத்தின் தலைவர் எடுத்தியம்பினார்.

comments

Similar Posts

  • | | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

  • |

    தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அரங்கில் (2019-10-18), இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் (SLAS) அவர்கள் சமர்ப்பித்த தென்னிலங்கையில் அமையப்பெற்றுள்ள ஐந்தாவது ஈசுவரம் என்று நம்பப்படுகின்ற கோயில் சார்ந்த ஆய்வுக்கட்டுரை தெரிவாகி, பேராசிரியப்பெருமகனார் திரு. சி. பத்மநாதனார் தலைமையிற் நடைபெற்ற சபையோர் கூடிய அரங்கில் பல்லூடக அரங்க அளிக்கையாக அரங்கேற்றப்பட்டது.                              …

  • | | |

    சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு

    சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும். comments

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • | |

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments