|

கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணி 2019

அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில்,  இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 15-07-2019,16 -07- 2018ஆம் திகதிகளில் இரு நாள்களுக்கு நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.

comments

Similar Posts

  • தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை

    சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும். comments

  • பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா

    யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப் பத்திரிக்கையில்(13-10-2019) விழா நிழற்படங்கள் தகவல்களோடு வெளியாகியிருந்தது. சிவபூமி சஞ்சிகையிலும் விழா நிகழ்ச்சி குறித்த செய்தி ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. comments

  • | | |

    யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழா

    2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி) comments

  • | |

    மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

    மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • |

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …