| | |

மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா

அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று
மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினர்களான கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கிழக்குபல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி சாந்தி கேசவன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்ற பிரதித்தலைவர் விடைக்கொடிச் செல்வர் திரு.சி.தனபாலா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை சைவநெறிக் கழக தலைவர் மருத்துவர் கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுகவுரையை மூத்த ஊடகவியலாளரும், அரங்கம் பத்திரிகை பிரதம ஆசிரியருமான பூ.சீவகன் நிகழ்த்த நுாலின் முதற் பிரதியை வைத்தி நிபுணர் கே.ரீ.சுந்தரேசன் அவர்கள் பெற்றுக்கொண்டதோடு ‘அலகிலா ஆடல் : சைவத்தின் கதை’ நூல் நயவுரையை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் ‘சிவப்பிரகாசக் கதவம்’ நுால் நயவுரையை சைவப்புலவர் திருமதி. சிவானந்தஜோதி ஞானசூரியம். அவர்களும் நிகழ்த்தினர். இறுதியில் நூலாசிரியர் வி.துலாஞ்சனனின் ஏற்புரையுடனும், கழகத்தின் உபதலைவர் திரு.கோபால் இளையராஜாவின் நன்றியுரையுடனும் விழா இனிதே நிறைவுற்றது.



comments

Similar Posts

  • | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில்,  இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments

  • பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018

    ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். comments

  • | |

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments

  • |

    சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருது

    கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

  • |

    பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்

    அட்டன் பிரதேச பேயாலோன் தோட்டம் (Hatton Fairlawn Estate) முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருத்தற் பணிகளுக்கு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் 20,000/= ரூபாய்கள் தமது சொந்தப்பணத்தினை கழகத்தின் சார்பில் நன்கொடையாக அளித்தார்கள். (கழகக்கூட்டம் ஒன்றில் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடன் கழகத்தின் பொதுச்செயலாளர்,தலைவர் உள்ளனர்.) comments