மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம்  சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன்  பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020)  இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில்,  சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள்.
இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால் அமையப்பெற்றது.

comments