Similar Posts
தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments
மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது. comments
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2016
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 05 -08- 2016ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments
வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு
வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். comments
வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்
2018ம் ஆண்டு 12ம் மாதம் ஏற்பட்ட வடபகுதி வெள்ளப்பெருக்கினாற் இடம்பெயர்ந்து அல்லலுற்ற மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பெருந்தொகையிற் அத்தியாவசியப்பொருட்கள் சேகரித்தபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் பொருட்களைக் கொள்வனவு செய்து, அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் கையளித்தனர். burst burst burst mde comments
இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடு
செம்டெம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை சைவநெறிக் கழகம், நாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தினுடனும் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி – இரத்மலானையில் விளங்கும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சிவத்திரு.மகாலிங்கக்குருக்கள் பெருமகனாரினை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைப்பித்து சைவசமய தீக்கை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. comments



