இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சார்ந்த உஜாலினி என்னும் 23 வயதுப் பெண்ணொருவருக்கு ASD Secondum என்னும் சிறு இதய துவாரப் பிரச்சினை இருந்துவந்தும் அப்பெண்ணுக்குரிய சத்திரசிக்கிச்சைக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து பண உதவிபெறுவதற்குதேவையான கடிதங்களை யாழ்.போதனா வைத்க்தியசாலை இதய நிபுணர் வழங்கியிருந்தும், அப்பெண்ணின் பெற்றோரால் பணச்சிக்கல்கள்,மொழிச்சிக்கல்களால் அவ்வுதவிகளைப் பெறாது இருந்தமையை அறிந்துகொண்ட கழகம், அப்பெண்ணின் பெற்றோர் கொழும்பிலுள்ள சனாதிபதி செயலகத்துக்கு சென்று குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்குரிய போக்குவரத்து, தங்குமிடம், உணவு…