கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி


இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர். இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….
2016ம் ஆண்டு மார்ச்சு மாதம் இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின்போது, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ம் ஆண்டில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுத்தமைபோன்று, இம்முறைத் திருவிழாவிலும் அன்னதானப்பணியினைப் பொறுப்பெடுத்து நடத்தியிருந்தோம். 2014ம் ஆண்டில் பொறுப்பெடுத்தமைக்கு அடுத்ததாக, இவ்வாண்டு மீண்டும் பொறுப்பெடுக்கப்பட்டது. இதனூடாக கழகத்துக்கும் ஊர்மக்களுக்கும் இடையே உறவுப்பாலத்தினை உருவாக்குதல்-வளர்த்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய நல்ல அறிகுறிகள் இவ்வாண்டு நடைபெற்ற அன்னதானப்பணியினூடாக கழகத்தினால் உணரப்பட்டது. comments
இலங்கை சைவநெறிக் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு. வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் குறித்து பத்திரிக்கையில் வந்த நூல் விமர்சனக் கட்டுரை comments
2017ம் ஆண்டு மார்ச்சு மாதம் 18ம் நாள் இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டுபோன்று, இவ்வாண்டும் அன்னதானப்பணியினை ஆலயத்தின் திருவிழாவின்போது இலங்கை சைவநெறிக் கழகம்(சைவசமூகத் திருப்பணிக் கழகம்) பொறுப்பெடுத்து செவ்வனே நிறைவேற்றியது. ஊர்மக்களுடன் நெருங்கிய பந்தம் இந்த அன்னதானத்தின் பலனாக உருவாகி, சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக் கிருஷ்ணக்குருக்கள்,சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும், பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில…
அட்டன் நகருக்கு அண்மையில் பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் பயிற்சிப்புத்தகங்கள்(கொப்பிகள்), எழுதுகோல்கள் (பென்சில்,பேனைகள்) ஒருதொகையை இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் சனவரி 2019களில் தமது சொந்தப்பணத்தில் வாங்கி வழங்கியிருந்தார்கள். . comments