| | |

நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு

வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர்.

 

சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக தொகுக்கப்பட்ட ஆகமக் கருத்துக்களாகும். அதில் நாவலர் தனது சொந்தக் கருத்துக்களை எழுதவில்லை.  சைவவினாவிடையில் பயன்படுத்திய சாதி என்கின்ற பதத்திற்குரிய விளக்கத்தை ஆகமங்களின் சாறாகப் பெற்ற தெளிவுகொண்டு பெரியபுராண வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். சாதிகள் பிறப்பால் வருவதல்ல;மாறாக சிவவழிபாட்டின் அன்புடமைத் திறத்தால் வருவது என்பதை நாவலர் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வகையில்; நாவலர் சாதிகளை ஐந்தாக வகுக்கின்றார்.

நாவலர் வகுத்த சாதிகள்

உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதிமூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.

சிவாகமத்தில்
 விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறுபெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள்
இரண்டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி;

இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும்
நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை
விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும்,
அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும்,
கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் பொருட்டு
ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப் பொருட்டு
சிவவேடந்தரித்தவர்களும், விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும்,
சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும்,
பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும்
ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள்
எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக்
கொள்ளப்படுவார்கள்
.”

ஆக; நாவலரின் கூற்றுப்படி இழிசாதியினர் என்போர் சிவபெருமானுக்குச் செய்யும் சரியை,கிரியைகளில் பொருள்,பணம் தேடி உடம்பை வளர்ப்போர்,கோயில் தர்மகர்த்தாக்களாகவிருந்து ஆலய வருமானங்களையும் ஆலயச் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்கள்,பணம் உழைக்கும் ஆசையிலும் மரியாதையைப் பெறும்நோக்கிலும் ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளும் குருமார்கள், விருத்திப்பொருட்டு சிவனடியார்போல் நடிப்பவர்கள்,விருத்திப்பொருட்டு துறவறம் பூண்டவர்கள், சிவஞான நூல்களைச் சொற்பொழிவு செய்கிறோம் என்றபெயரில்ப் பொருள்;பணம் தேடி வயிறுவளர்பவர்கள்,சிவநிந்தனை;சிவத்துரோகம் செய்பவர்கள் ஆகியோராவர்.  இன்றைய சைவசமய உலகில் சிவாச்சாரியார்கள்,ஆலய தர்மகர்த்தாக்கள்,சமய சொற்பொழிவாளர், சைவ வேடந்தாங்கியோர் என்று பெரும்பாலான அனைவரும் நாவலரின் கூற்றுப்படி இழிசாதியினரேயாம். இதனால்த்தான்; நாவலர் கூறிய இக்கருத்துக்களை அத்தனைபேரும் இருட்டடிப்புச் செய்துவருகின்றனர். அதில் கம்பவாரிதியவர்களும் இணைந்துகொண்டது வருத்தத்துக்குரியதேயாம்!

comments

Similar Posts

  • |

    மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

    மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.விடைக்கொடிச்செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள். comments

  • | |

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018)  இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார். comments

  • | | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

  • | |

    நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

    மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம்…

  • | |

    யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

    இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments

  • | |

    நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

    தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…