சைவசமய மாநாடு

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

  • | | | | |

    தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!

    தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்! – இலங்கை சைவநெறிக் கழகத்தின் “சைவம் போற்றுதும்” நிகழ்வில் பரவசம். இலங்கை சைவநெறிக் கழகத்தினரின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற “சைவம் போற்றுதும்” விழாவானது பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கடந்த 2023.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகுசிறப்பாக இடம்பெற்று முடிந்தது. “தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்து சிவத்தமிழ் பருகும் திருவிழா” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விழா, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் கோவிலில், சைவசமய மரபில் சைவசமயப் பதிநூல்கள் சிவபெருமானின் திருமூர்த்தமாகப் பாவிப்பதினால்…

  • | | | |

    சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்

    சைவப்பெருஞ்சமயத்தில் சுமார்த்தமதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்தங்களினை இனங்கண்டு நீக்கி, சைவப்பெருஞ்சமயத்தினை சுத்தநெறியாகத் தாபிக்கும் திருநூல் என்பதுவே, சுத்தசைவம் நூலின் சிறப்பாகும். தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலினை முழுமையாகப் படித்து இன்புற்ற சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் அடியேனிடம் ”நூலாசிரியரினை யானைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருதலே எம் கடனாகும்” என்று உள்ளம் கசிந்துருகக் கூறினார். தம் நூல்கள் முதலிய பல சைவ நூல்களுக்கும் பொருள் விளக்கம் கொள்வதற்கு இந்நூலே உறுதுணை என்பதினை இந்நூலினைப்…

  • | | |

    திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம்…

  • |

    தென்னிலங்கை தெனியாயவில் சைவ மாநாடு

    மாத்தறை மாவட்டத்தில் தெனியாயப் பகுதியில் 27- 10 – 2018ஆம் நாள் சைவ முன்னேற்ற மாநாடு வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.  தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இலங்கை சைவநெறிக் கழகத்தாரும் கலந்து சிறப்பித்தனர். தெனியாய சைவ முன்னேற்றக் கழகமானது இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களின் வழிகாட்டுதலில் தெனியாயவில் தொடங்கப்பட்டுள்ள சைவசமய அமைப்பாகும்.  தெனியாயப் பிரதேசமானது கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்துள்ள முதன்மை நகரமாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில்…