பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், வீரகேசரிப் பத்திரிக்கையில்(13-10-2019) விழா நிழற்படங்கள் தகவல்களோடு வெளியாகியிருந்தது.

சிவபூமி சஞ்சிகையிலும் விழா நிகழ்ச்சி குறித்த செய்தி ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

comments

Similar Posts

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • | |

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்

    அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments

  • |

    சைவ ஆகம நூல்கள்

    குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும் இல்லை.இதனால், அவை PDF ஆக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பூர்வ காமிக ஆகமம் ஏற்கனவே தமிழ்மொழிபெயர்ப்புடன் இணையத்தில் உள்ளன.அவற்றுக்குரிய சொடுக்கிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான ஆகமங்கள் தமிழிலும்-ஆங்கிலத்திலும் உள்ளன. அவற்றின் சொடுக்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இணையத்திலுள்ள சைவசமய ஆகம நூல்களையெல்லாம் இயன்றவரை இங்கு தொகுத்துள்ளோம். சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களும்…

  • |

    ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

    ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…

  • | |

    புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

    புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் “சிவலிங்கம்” பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால்,  இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை…

  • | |

    யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

    இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments