கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.