Similar Posts
பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது. comments
பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்
அட்டன் பிரதேச பேயாலோன் தோட்டம் (Hatton Fairlawn Estate) முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருத்தற் பணிகளுக்கு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் 20,000/= ரூபாய்கள் தமது சொந்தப்பணத்தினை கழகத்தின் சார்பில் நன்கொடையாக அளித்தார்கள். (கழகக்கூட்டம் ஒன்றில் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடன் கழகத்தின் பொதுச்செயலாளர்,தலைவர் உள்ளனர்.) comments
மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது. comments
இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடு
செம்டெம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை சைவநெறிக் கழகம், நாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தினுடனும் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி – இரத்மலானையில் விளங்கும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சிவத்திரு.மகாலிங்கக்குருக்கள் பெருமகனாரினை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைப்பித்து சைவசமய தீக்கை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. comments
ஐயம் தெளிதல் – 2019
சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தார்.
மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம் சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020) இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில், சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால்…

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)