Similar Posts
நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…
ஐயம் தெளிதல் – 2019
சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தார்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 – 2021ஆம் நாளன்று மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments
நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு
வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர். சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக…
தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments
கொரணைப் பிரதேசத் தமிழ் மக்களுக்கு ஆகம ஆலோசனை வழங்கல்
கொரணை புரோசேஸ்டர் கோவின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு(14-04-2018) ஆகமசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து சிவாச்சாரியார் சகிதம் சென்று, அவ்வூர் மக்களின் ஆலயபரிபாலனம் தொடர்பான ஆகம ஐயங்களை நீக்கி இலங்கை சைவநெறிக் கழகத்தாற் வழிகாட்டப்பட்டது. comments

.jpg)
.jpg)
.jpg)
.jpg)