| | | |

சீரடிபாபா வழிபாடு -சைவசமயத்தினை ஒழிப்பதற்கு திட்டமிட்டுப் புகுத்தும் சுமார்த்தமத அரசியல்

சைவசமயத்தவரின் சமய உறைப்புநெறியைச் சீர்குலைத்தாலேயொழிய பிறிதொருவழியிலும் தமது ஏகான்மவாத சுமார்த்தமதக் கொள்கைகளைப் புகுத்தமுடியாதென்று நன்குணர்ந்து, சைவசமயத்தவரின் கற்புநெறியைச் சீர்குலைக்குமாறு சீரடிபாபா வழிபாடு புகுத்தப்பட்டுவரும் இப்பெரும் இடர்காலத்தில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் சைவசமயத்தவருக்குச் சீரடிபாபா வழிபாடென்பது கற்புநெறியைச் சீர்குலைக்கும் இறக்குமதி வணிக வழிபாடே என்பதனைக் கட்டுரைகள் வாயிலாகச் சமூக ஊடகங்களில் எழுதிவந்தபோதும், சில ஸ்மார்த்தமத ஏகாதிபத்திய அனுதாபிகளாக விளங்கும் ஆச்சாரிய அபிடேகமெடுத்த பதிதர் சீரடிபாபாவுக்கு திருக்குடமுழுக்கு சிவாக்கினி வளர்த்தல் என்பவற்றை நடத்தினர். இதனால், சைவப்பெருமக்கள் பலரும் சைவ வாழ்வியற் கற்புநெறியைத் தெளிந்து நிற்கவேண்டும் என்பதன்பொருட்டு, இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களால் காணொளி 23 – 04 – 2023ஆம் நாள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இக்காணொளியினால் பெரும் எதிர்ப்புக்கள் அதிகார வர்க்கங்களால் ஏற்படுத்தப்பட்டபோதும், இலங்கைச் சைவநெறிக் கழகம் சைவசமய மக்களுக்குச் சைவசமய உண்மைகளை உணர்த்தும் திருப்பணியில் ஒருபோதும் சமரசஞ் செய்து கொள்ளாது, அத்தனை எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு இலங்கைச் சைவநெறிக் கழகம் சிவபெருமானின் திருவடிக்கமலங்களையே துணையாகக் கொண்டு, பீடுநடையிடுவதாயிற்று.

comments

Similar Posts