Similar Posts
பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்
மலையகத்தில் சாமிமலைப்பிரதேச பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு 14,700/= பெறுமதியான 15 மூட்டை சீமெந்து(05-01-2021), சமூகப்பணிப்பொறுப்பாளர்- கழகப்பிரதித்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது. comments
அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்
2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…
மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020
26 – 06 – 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. . comments
மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகம்
தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றம் பல்வேறு அமைப்புக்களினையும் இணைத்து ஏற்பாடு செய்த மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகமும் கலந்துகொண்டதுடன், ”நாவலர் வழி பெரியபுராணமும் சைவ மதிப்பீடுகளும்” என்னும் தலைப்பில் (2021-01-02), கழகத் தலைவர் மருத்துவர் ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார். comments
பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப் பத்திரிக்கையில்(13-10-2019) விழா நிழற்படங்கள் தகவல்களோடு வெளியாகியிருந்தது. சிவபூமி சஞ்சிகையிலும் விழா நிகழ்ச்சி குறித்த செய்தி ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. comments
களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023
களுத்துறை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குரிய நவராத்திரி விழாவுக்குரிய விவாத நிகழ்ச்சிக்குரிய பயிற்சி இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டதுடன், இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் 20 – 10 – 2023ஆம் நடைபெற்ற குறித்த விவாத நிகழ்ச்சி நடுவர் பொறுப்பில் இருந்து நெறிப்படுத்தப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிக்கு , இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சைவத்திரு.ய.அநிருத்தனன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின்…
