Similar Posts
ஐயம் தெளிதல் – 2019
சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தார்.
மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்
மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.விடைக்கொடிச்செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள். comments
சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி
தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது. comments
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில் திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார். comments
மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகம்
தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றம் பல்வேறு அமைப்புக்களினையும் இணைத்து ஏற்பாடு செய்த மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகமும் கலந்துகொண்டதுடன், ”நாவலர் வழி பெரியபுராணமும் சைவ மதிப்பீடுகளும்” என்னும் தலைப்பில் (2021-01-02), கழகத் தலைவர் மருத்துவர் ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார். comments
2015 | சமயப்பணி | சிவராத்திரி | நிதியுதவிசிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு
சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது. நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும். எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும். comments

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)