சிவராத்திரிப் பெருநாள் 2015 – உலக சைவப்பேரவை இலங்கைக் கிளையின் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றுதல்
சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது. நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும். எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும்.