|

கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு

கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். "ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்" என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும். இலங்கையில் சைவசமயம் குறித்த அடிப்படையை அறிந்து கொண்டு ஏற்பட்ட புரிந்துணர்வால், இந்துவென்னும்  சொற்பதத்தில் பொருள் இல்லையென்றும், சைவம் என்றும் வேதாந்தம் என்றுமே இந்திய சமயங்கள் அறியப்படவேண்டும் என்றும் யாழ்ப்பாணத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு, தமது அமெரிக்காப் பயணத்திற்கு நிதிக்கொடையளித்த இராமநாதபுர மன்னருக்கு நன்றி தெரிவிக்க, இராமநாதபுரம் சென்றார். அங்கு, இராமநாதபுர மன்னர் முன்னிலையில் மன்னரின் சைவசமய ஆலோசகரான சூளை சோமசுந்தர நாயகருடன் சங்கராத்வைதத்திற்கும் சைவசமயத்திற்குமான தத்துவ விவாதம் நடத்தும்படி இராமநாதபுர சேதுபதி மன்னர் வேண்டிக்கொள்கின்றனர். மன்னரின் வேண்டுதலுக்கு அமைவாக, சுவாமி விவேகானந்தர் சூளை சோமசுந்தர நாயகருடன் விவாதிக்கின்றார். அப்போது, சிவாகமங்களில் இருந்து சான்று காட்டாது வேதங்களில் இருந்தே காட்டவேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகின்றார். அப்போது, வேதத்தில் கூறப்படும் பிரமம் என்பதன் பொருள் என்னவென்று சூளை சோமசுந்தர நாயகர் வினாவினார். அதற்கு, சுவாமி விவாகனந்தர் பிரமம் என்றால் பெரியதென்று கூறினார். பெரியதென்று ஒன்று உண்டென்றால், அது சிறியதென்ற இன்னொன்றின் இருப்பை ஏற்பதாகவே அமையும். ஏனெனில் ஒரேயொரு பொரு மட்டுமே உள்ளதென்றால், பெரியது சிறியதென்ற கருத்தே எழாது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளபோதே, ஒன்று பெரியது மற்றையது சிறியதென்ற பேதங்கள் எழும். எனவே பேரறிவுடைய பிரமமும் சிற்றறிவுடைய உயிர்களும் உள்ளதென்பது பிரமம் என்னும் சொல்லாட்சியாலேயே உறுதியாகின்றதென்று சூளை சோமசுந்தர நாயகர் சாதித்தார். ஏனெனில், சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம் சங்கராத்வைத மதம். இம்மதக் கொள்கைப்படி, உயிர்களென்றோ உலகங்கள் என்றோ எதுவும் இல்லை; பிரமமே உயிர்களாகவும் உலகாகவும் தோற்றப்போலிகளாய்க் காட்சியளிக்கின்றதென்பதாம்.
வேதாந்தம் என்பது சைவசமயத்தைப் பொறுத்தவரை உபநிடதங்களையோழிய, அந்த உபநிடதங்களுக்குப் பிழையான பொருளைக் கற்பித்து எழுந்த சங்கராத்வைத மதம் முதலியவற்றையன்று. இவ்வுண்மையை உணராதோர், வேதாந்த சித்தாந்தம் வேறில்லை என்பதற்கு சங்கராத்வைதமும் சைவசித்தாந்தமும் வேறில்லையென்று தவறாக உரைசெய்வர். தாயுமானசுவாமிகள் சங்கராத்வைதம் முதலியவற்றை பொய்நெறிகளென்றும், மெய்கண்டார் பெற்ற சிவஞானமாகிய சைவசித்தாந்தமே மெய்நெறியென்றும் சாதித்தருள்கின்றார். சூளை சோமசுந்தர நாயகப்பெருமான் பிரமம் என்னும் சொல்லாட்சியைக் கொண்டே, சுவாமி விவேகானந்தரை வாதில் வென்றதோடு, பிரமத்தை உலகாகவும் உலகப்பொருட்களாகவும் உயிர்களாகவும் தோற்றப்போலியாக்கியிருப்பதே மாயையெனின், பிரமத்தைத் தாக்கி இப்படி உழலச்செய்யும் மாயை பிரமத்தைக் காட்டிலும் வலுவானதாகின்றதென்பதால், பிரமம் எப்படிப் பூரணத்துவம் உடையதாகும்?  முதலிய பல்வேறு கேள்விகளைக் கேட்டு சுவாமி விவேகானந்தருக்கு சங்கராத்வைதத்தின் குறைகளை உணர்த்தினார்.  இதனால் ஏற்பட்ட ஞானத்தாகத்தினால், சைவத்திரு.ஜே.எம்.நல்லுச்சாமிபிள்ளையவர்களை நாடி, சைவசித்தாந்தத்தை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கினார்.  இச்சைவசித்தாந்தத்தைத் தாம் முதலிலேயே அறியாமல்விட்டது தம் தவக்குறைவென்று வருந்தினார். இவ்வரலாறுகள் இக்காலத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளபோதும், இலங்கை கொழும்பு விவேகானந்த சபை சைவசித்தாந்த நெறியில் நிற்கும் சபையாக விளங்குவது சுவாமி விவேகானந்தரின் ஞானத்தேடலைப் போற்றும் மரபுக்குரியதாகும் என்று சபையோருக்கு தமதுரையில் கழகத் தலைவர் நன்றே  விளக்கினார்.

இலங்கை சைவநெறிக் கழகத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நன்றி பாராட்டி கொழும்பு விவேகானந்த சபைத் தலைவர் உரையாற்றும்போது, கொழும்பு விவேகானந்த சபையானது தொடங்கப்படும்போது சைவ சபையாகவே கூட்டப்பட்டதென்றும், அக்கூட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் இறையடி எய்தியமையினால், அவருடைய பெயரை அவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் சூட்டிக்கொண்டு தொடங்கப்பட்டதென்றும், அங்ஙனம் தொடங்கினபோதும் சைவசித்தாந்த மரபில் இயங்கும் சபையாகவே சபை உருவாக்கப்பட்டதென்றும், தொடங்கப்பட்ட காலந்தொட்டு சைவசித்தாந்த சபையாகவே இயங்கி வருவதும், சைவசமய மறுமலர்ச்சிக்குரிய பல்வேறு நூல்களைப் படைத்துப் பரப்பிவரும் வரலாற்றுடையதாகவும்  சைவபோதினி என்னும் பெயரில் சைவப் பாடத்திட்ட நூல்களை வெளியிட்ட சிறப்புடையதாகவும் விளங்கும் சபையென்று விளக்கினார். கொழும்பு விவேகானந்த சபை சைவசமய சபையாகவே எக்காலமும் விளங்கும் என்றும், அதற்கு எந்தவொரு கேடும் வராது தமிழர் போற்றவேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.

 

Similar Posts

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…

  • |

    மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்

    மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.விடைக்கொடிச்செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள். comments

  • | |

    நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

    மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம்…

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப்பணி 2016

    சிவராத்திரித் திருநாளினை முன்னிட்டு 07-03-2016 ஆம் நாள் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சைவாலயங்களில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. comments

  • |

    ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

    ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…

  • | | |

    திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம்…