| |

நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில்29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர்.

சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம் உத்தரணி சிறுதட்டம் என்பனவும், அன்புமார்க்க சிவபூசையின் பொருட்டு சிவலிங்கமும்  வழங்கப்பட்டது. மேலும் அன்புமார்க்கமாக இல்லங்களில் சிவபூசையினை மேற்கொள்வதற்கு வசதியாக, ”இல்லங்களில் சிவபூசை செய்வோம்” என்னும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் நூலும் சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு வழங்கப்பட்டது.  415 பேர் சமயதீக்கை பெற்றபோதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒன்றெனும் வீதத்தில் 351 பேருக்கு  இவ்வாறு வழங்கப்பட்டது. ஏறத்தாழ 700 பேர் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். அவர்களில் அறநெறி ஆசிரியர்களினையும் பிள்ளைகளினையும்  ஒருங்கிணைத்து, ”மாகேசுவரபூசை” மரபான முறையில் செய்வது எப்படி என்னும் விளக்கத்தோடு போதிக்கப்பட்டு, அவர்களினை மாகேசுவரர்களாகப் பாவித்து மாகேசுவரபூசையும் செய்யப்பட்டது.

காலை 10.30 மணி தொடக்கம் சைவ அனுட்டானம், அன்புமார்க்கச் சிவபூசை என்பவற்றினை சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு குழுக்குழுவாகப் பிரித்து, மரு.ஈசான தேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் செய்துகாட்டி பயிற்சியும் விளக்கமும் வழங்கினார். இவ்வாறு மாலை 4.30 மணிவரை தொடர்ச்சியாக சமயதீக்கை பெற்றுக்கொண்டோர் அனைவருக்கும் சைவசமய சைவ அனுட்டானமும் அன்புமார்க்க சிவபூசையும் பயிற்றுவிக்கப்பட்டது. சமயதீக்கை பெற்றுக்கொண்டோர் அனைவரும் பொறுமையாக விருப்பத்தோடு பழகிக் கொண்டனர்.   சைவ அனுட்டானப் புத்தகங்கள் நல்லூர் சிவாகமபீடத்தினாலும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினாலும்  வழங்கப்பட்டது. நாவலர்பெருமான் அருளிய சுருக்க சைவ அனுட்டானமாகிய ‘‘நித்திய கரும விதி” என்னும் நூலே சைவ அனுட்டான நூலாக வழங்கப்பட்டது. கொழும்பு விவேகானந்த சபையினால் வழங்கப்பட்ட சைவபோதினி நூல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட ”இல்லங்களில் சிவபூசை செய்வோம்” நூலும் சைவசமய தீக்கை பெற்றுக்கொண்டோருக்கு, இல்லங்களில் சிவபெருமானை வழிபட்டுச் சிறக்கும்பொருட்டு வழங்கி வைக்கப்பட்டது.

குயின்ஸ்பெரித் தோட்ட நவநாதச்சித்தர் சிவாலயத்தின் அறங்காவலர் சபையும் ஊர் மக்களும் வழங்கிய ஆதரவு போற்றுதலுக்குரியது. ஊர் மக்களும் அறங்காவலரும் நிதியுதவி அளித்து இவ்வளவு பெரிய சிவப்பணியினை முன்னெடுத்த அத்தனை அமைப்புக்களுக்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

அறங்காவலர் சபை உறுப்பினர்களும் சமயதீக்கை பெற்றுக்கொண்டதோடு, சைவசமய அனுட்டானத்தினையும் அன்புமார்க்க சிவபூசையினையும் விருப்போடு பழகிக் கொண்டனர்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

comments

Similar Posts

  • | | | |

    சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்

    சைவப்பெருஞ்சமயத்தில் சுமார்த்தமதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்தங்களினை இனங்கண்டு நீக்கி, சைவப்பெருஞ்சமயத்தினை சுத்தநெறியாகத் தாபிக்கும் திருநூல் என்பதுவே, சுத்தசைவம் நூலின் சிறப்பாகும். தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலினை முழுமையாகப் படித்து இன்புற்ற சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் அடியேனிடம் ”நூலாசிரியரினை யானைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருதலே எம் கடனாகும்” என்று உள்ளம் கசிந்துருகக் கூறினார். தம் நூல்கள் முதலிய பல சைவ நூல்களுக்கும் பொருள் விளக்கம் கொள்வதற்கு இந்நூலே உறுதுணை என்பதினை இந்நூலினைப்…

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • | |

    மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

    மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…

  • |

    சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருது

    கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…

  • | |

    இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

    இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.  இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….

  • |

    சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

    தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது. comments