சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் கழகத்தாரால் 10-10-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு

மாணவரிடம் சைவசமயத் தெளிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் கல்லூரி அதிபரின் அனுமதியைப் பெற்று, வகுப்புத் தோறும் சைவசமய ஐயம் தெளிதல் வகுப்புக்களை சிறப்புற நடத்தியிருந்தனர். எமது சமயத்தின் பெயர் சைவசமயம் என்று உணர்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும், சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நாள்தோறும் வழிபட்டுவருவதன் தேவைப்பாட்டினையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்நிகழ்வை நடத்தக்கூடியதாகவிருந்தது.இதுபற்றிய செய்தி 30 - 10 - 2013ஆம் நாளன்று வெளியாகிய வீரகேசரி நாளிதழில் கழகத்தாரினால் அனுப்பிவைக்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகப் படங்களோடு பிரசுரிக்கப்பட்டிருந்தது.