❤️❤️❤️சொய்சாப்புரத்தில் சிவத்தமிழ்க் கலைவிழா -2023 ❤️❤️❤️
சிவத்தமிழ்க் கலைவிழா – இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் முத்தமிழ் பொங்கும் சிவத்தமிழ்க் கலைவிழாவானது 05-11-2023ஆம் நாள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி வெகுசிறப்பாகச் சொய்சாப்புரம் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இக்கலைவிழாவின் பொருட்டுப் பேச்சுப்போட்டி, வினாத்தாள் தேர்வுப்போட்டி என்பவற்றுடன் கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் சித்திபெற்ற மாணவருக்குச் சிறப்புப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், அனைத்து மாணவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. …
