மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.
வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர். சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக…
மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஆலய நிர்வாக சபையினரின் சார்பாக கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக, பெப்பிரவரி மாதம் 27ம் நாள் மகோற்சவத்திருவிழாவின்போது “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் தலைப்பிற் சொற்பொழிவாற்றும்பொருட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி சைவத்திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் அவர்கள், விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களுடனும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடனும் இணைந்து சென்றிருந்தார்கள். மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளை! அம்பிகை அடியாரொருவரின் கனவிற்தோன்றி வில்வமரத்தடியிற்…
சைவசித்தாந்தம் தமிழருடையதா? சைவசித்தாந்தத்தை ஒருசாரார் தமிழருடையதென்றும், ஒருசாரார் தமிழருடன் சம்பந்தம் செய்வது சிவத்துரோகம் என்றும் வாதிட்டவாறுள்ளனர். மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பென்ற வாதப்பிரதிவாதங்கள் சைவசித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தப்படுத்துவதில் ஏற்பட்டுமுள்ளது. சைவ சித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தம் செய்வது ஏற்புடையதா என்பதை சைவ நூல்கள் கொண்டு ஆராய்வோம்.அதுவே தெளிவான விடையைத் தரும். நால்வேதங்கள் உலக மக்கள் யாவர்க்கும் பொதுவான நூலாயினும், வேதங்களை ஏற்றுக்கொள்ளும் வைதீகர்களுக்கே அவை சிறப்பானவையாம்.ஏனெனில் ஏனையோர் நால்வேதங்களை ஏற்கார். அதுபோல; இந்துப் பண்பாடானது…
இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு முன்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்களாகவுள்ளனர். ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாதவர்கள், தாம் சிவஶ்ரீ(சிவத்திரு) என்று போட்டுக்கொள்ள முடியாதென்பதால், பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதாக கூறுகின்றனர். ஏனைய பூசகர்பணி செய்யாதவரும் பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதற்கு இதையே விளக்கமாக உரைக்கின்றனர். 1) இறைவன்(பிரம்மம்) என்பது பொதுப்பெயர். சிவம் என்பது சிறப்புப் பெயர். எதற்கு மங்கலமும் திருவருட்சிறப்பும் மிகுதியாய் உண்டென்றால், ஒப்பற்ற தன்மையில் மிகுந்து உயர்ந்ததாய் இருப்பது…