| |

சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

05 – 08 – 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
 

தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது.

சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிச் சைவசமய மக்களிடம் சைவசமய விழிப்புணர்வை உருவாக்குவது ஆக்கபூர்வமானதாக அமையும் என்னும் கழகச் சிந்தனைக்கு அமைவாகவும், நாவலர்பெருமானின் உத்திக்கு ஏற்பவும் துண்டுப்பிரசுரப்பணி சைவாலயத் திருவிழாக்களின்போது கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

comments

Similar Posts

  • |

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …

  • |

    தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு

    தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments

  • திருக்கோணேசுவரத் திருத்தலத்தில் சைவசமய துண்டுப்பிரசுர விநியோகம் 2015

    கழக உறுப்பினர் திரு.அ.கஜந்தன், திரு.ச.தாஸ்குமார் ஆகியோர் திருக்கோணேசுவரத் திருத்தலத்திற்கு 2015- 03- 14ஆம் நாள் செல்லும்பேறு பெற்றபோது, திருக்கோயில் அடியார்களுக்கு கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரத்தினை விநியோகித்தனர். comments

  • | |

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments

  • | |

    சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்

    தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது.  சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத்…

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…