அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை


நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம் அரங்கேற்றப்பட்டது. சிவபூமிச் சைவமுதலிகளாக 1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள், 2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், 3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், 4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சைவத்தேசிகர்களாக 1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,…
சைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம் போற்றுதும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.திருமதி.அ.பி.ஜெயராஜா தம்பதியர் பெற்றுக்கொண்டனர். சைவசமயம்,சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவ சமய நூல்கள், விடைக்கொடி என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளுடன், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் வரலாறுகளையும், கழகத்தினால் சைவம்போற்றுதும் விழாவிற் விருதுவழங்கப்பட்ட சைவச்சான்றோர் பற்றிய சிறுகுறிப்புக்களையும்…
சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018) இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார். comments
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments
நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. comments
2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி) comments