சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்
நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 - 04 - 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம் அரங்கேற்றப்பட்டது.
சிவபூமிச் சைவமுதலிகளாக
1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள்,
2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார்,
3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார்,
4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும்,
சைவத்தேசிகர்களாக
1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,
2)சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் பெருமானார்,
3)சைவப்புலவர் காசிநாத அருணாசல தேசிகமணி பெருமானார்,
4)பண்டிதர் மு.கந்தையா பெருமானார் ஆகியோரும்
சிவபூமிச் சிவபூமிச் சைவத் தாதையர்களாக
1)கோமான் திரு.பொன்னம்பலம் இராமநாதன் பெருமானாரும்,
2)சைவப்பெரியார் கா.சூரன் பெருமானாரும் பிரகடனம் செய்துவைக்கப்பட்டனர்.
இப்பிரகடனத்தினூடாகச் சைவசமயம் இடம்,சாதி என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து சிவபூமியான இலங்கைக்கே உரித்தான பண்பாடென்னும் மறுமலர்ச்சியை இலங்கை சைவநெறிக் கழகம் உருவாக்கியுள்ளது எனலாம்.