| |

யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார்.

comments

Similar Posts

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • |

    சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

    தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது. comments

  • | | |

    திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே!

    திருவள்ளுவர் பெருமானினை திருநீறு அணிவித்து யாழ்ப்பாணத்தில் சிலை வைத்ததும் நாத்தீக ஈவேராவியல் அரசியலால் செல்வாக்குப்பெற்ற சிலர்,” திருவள்ளுவர்பெருமானுக்குத் திருநீறு அணிவிக்கலாமா?” என்று சமூக ஊடகங்களில் விசனங்களைப் பரப்பத் தொடங்கினர். இதன்போது, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களால், திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே என்பதனை நன்கு விளக்கிக் காணொளி 25 – 03 – 2023ஆம் நாள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது.   comments

  • |

    நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்

    1969ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப்பட்ட நாவலர் மாநாட்டு மலரினை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் மறுபதிப்பாக அச்சேற்றப்பட்டு, 03-08-2013 ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மண்டப நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோடு, நூல்களை மண்டபத்தில் விற்கும் பொறுப்பினையும் ஏற்று, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) மரு.கி.பிரதாபன் அவர்களின் தலைமையில்  அவற்றையெல்லாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தது.    

  • |

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…