மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா

அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29,12.2018 அன்று
மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினர்களான கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கிழக்குபல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி சாந்தி கேசவன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்ற பிரதித்தலைவர் விடைக்கொடிச் செல்வர் திரு.சி.தனபாலா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை சைவநெறிக் கழக தலைவர் மருத்துவர் கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுகவுரையை மூத்த ஊடகவியலாளரும், அரங்கம் பத்திரிகை பிரதம ஆசிரியருமான பூ.சீவகன் நிகழ்த்த நுாலின் முதற் பிரதியை வைத்தி நிபுணர் கே.ரீ.சுந்தரேசன் அவர்கள் பெற்றுக்கொண்டதோடு ‘அலகிலா ஆடல் : சைவத்தின் கதை’ நூல் நயவுரையை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் ‘சிவப்பிரகாசக் கதவம்’ நுால் நயவுரையை சைவப்புலவர் திருமதி. சிவானந்தஜோதி ஞானசூரியம். அவர்களும் நிகழ்த்தினர். இறுதியில் நூலாசிரியர் வி.துலாஞ்சனனின் ஏற்புரையுடனும், கழகத்தின் உபதலைவர் திரு.கோபால் இளையராஜாவின் நன்றியுரையுடனும் விழா இனிதே நிறைவுற்றது.

comments